செய்திகள் :

காதலனை வரச் சொன்ன காதலி; சிக்கவைத்த உறவுக்கார பெண்; 40 நிமிடங்கள் டிரங்க் பெட்டியில்! நடந்தது என்ன?

post image

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் வசிக்கும் இளம் பெண் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த வாலிபர் வீடு அப்பெண்ணின் வீட்டில் இருந்து 7 வீடு தள்ளி இருக்கிறது. அப்பெண்ணின் பெற்றோர் காலையில் வேலைக்கு புறப்பட்டு சென்ற பிறகு வீட்டில் அப்பெண் மட்டும் தனியாக இருந்தார்.

உடனே தனது காதலனுக்கு போன்செய்து வீட்டில் யாரும் இல்லை என்று கூறி உடனே தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அந்த வாலிபரும் உடனே காதலி வீட்டிற்கு வந்தார். ஆனால் அந்த வாலிபர் காதலி வீட்டிற்குள் செல்வதை இளம்பெண்ணின் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் உறவுக்கார பெண் ஒருவர் பார்த்துவிட்டார்.

இதனால் வீட்டிற்குள் யார் சென்றது என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்பெண், இளம்பெண் வீட்டிற்கு வந்தார்.வீட்டுக்கதவை அப்பெண் தட்டியபோது இளம்பெண் வந்து கதவை திறந்தார். உடனே வீட்டிற்குள் சென்று அப்பெண் சோதித்து பார்த்தார்.

ஆனால் வீட்டில் யாரும் இல்லை. ஆனால் வீட்டிற்குள் ஒரு ஆண் நுழைவதை நான் பார்த்தேன் என்று அப்பெண் தெரிவித்தார். வீட்டிற்குள் யாரும் இல்லை. உள்ளே நுழைந்தவர் கரைந்தா போய்விட்டார் என்று இளம் பெண் கூறியுள்ளர். அப்பெண்ணிற்கு தனது சந்தேகம் தீரவில்லை. வீட்டின் மெயின் கதவை பூட்டிவிட்டு இளம் பெண்ணின் தாயார் மற்றும் சகோதரனுக்கு தகவல் கொடுத்து வரவைத்தார். அவர்கள் வந்து பீரோ, படுக்கை, மாடி என அனைத்து இடங்களிலும் சோதித்து பார்த்தனர். ஆனால் எங்கேயும் வீட்டிற்குள் நுழைந்த நபரை காணவில்லை.

அப்போது வீட்டில் இருந்த இரும்பு டிரங்க் பெட்டியில் இருந்து சத்தம் வந்தது. உடனே அந்த பெட்டி சாவியை கொடுக்கும்படி அப்பெண்ணிடம் கேட்டனர். ஆனால் அந்த பெட்டியில் தனது உடைகள் மட்டும் இருப்பதாக கூறி சாவியை கொடுக்க மறுத்தார். இதையடுத்து இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வந்தவுடன் வேறு வழியின்றி இளம் பெண் டிரங்க் பெட்டியை திறந்தார். உள்ளே அவரது காதலன் மூச்சுத்திணறி படி உள்ளே இருந்து வெளியில் வந்தார்.

40 நிமிடத்திற்கும் மேல் அவர் உள்ளே இருந்தார். மேலும் சிறிது நேரம் இருந்திருந்தால் மூச்சுத் திணறி இறந்திருப்பார். அதிர்ஷ்டவசமாக அதற்குள் பெட்டியை திறந்துவிட்டனர். அவர் டிரங்க் பெட்டிக்குள் இருந்து வந்ததை பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். போலீஸார் இதனை கண்டு சிரித்தனர். உறவினர்கள் அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைக்க முயன்றனர். ஆனால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டனர். இரண்டு பேரையும் அழைத்து சென்று சிறையில் போடுங்கள் என்று அப்பெண்ணின் தாயார் போலீஸாரிடம் கேட்டுக்கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிம்ரன் பாலா: குடியரசு தின அணிவகுப்பில் வரலாற்று சாதனை படைக்கும் ஜம்மு காஷ்மீர் பெண் அதிகாரி

புதுடெல்லியில் நடைபெறவுள்ள நாட்டின் 77-வது குடியரசு தின அணிவகுப்பில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 26 வயதான சிம்ரன் பாலா ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைக்கவுள்ளார். மத்திய போலீஸ் படையின் (CRPF) உதவித் தளபதிய... மேலும் பார்க்க

டெல்லி: அரசு விருந்தினர் மாளிகை கட்டியதில் ஊழல் - மகாராஷ்டிரா அமைச்சர் உட்பட 46 பேர் விடுவிப்பு

2005-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் சகன் புஜ்பால் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, டெல்லியில் `மகாராஷ்டிரா சதன்' கட்டுவதற்கு டெண்டர் விடாமல் சமன்கர் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு பணி வழங்கப்பட்டது.... மேலும் பார்க்க

காதலனை கொன்று சிறை சென்ற பெண்ணுக்கு ஆயுள் கைதியுடன் மலர்ந்த காதல்! - திருமணம் செய்ய 15 நாள் பரோல்

ராஜஸ்தான் மாநிலத்தில் மாடலாக இருந்த நேகா(34) என்ற பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவருடன் 2018ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. நேகாவிற்கு ஏற்கனவே திக்‌ஷந்த் கம்ரா என்ற காதலன் இருந்தார். ... மேலும் பார்க்க

நாமக்கல்: மலைக்கோயிலில் எளிமையாக நடந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் திருமணம்! - ராஜஸ்தானை சேர்ந்தவர்!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்த் மீனா. இவர், கடந்த 2022-ம் ஆண்டு தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரியாக தேர்வானார். தற்போது சேலம் புறநகர் ஏ.எஸ்.பியாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராஜஸ்தான் மா... மேலும் பார்க்க

மும்பை: உத்தவ் கட்சி கவுன்சிலர் மேயராவதை தடுத்த பாஜக... மகாராஷ்டிராவில் 15 மாநகரில் பெண் மேயர்கள்!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் மேயர் பதவிக்கான லாட்டரி குலுக்கல் மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் எந்த மாநகராட்சிக்கு பெண் மேயர், எந்த மாநகராட்சிக்கு பொது பிரிவை சேர்ந்தவர் மேயர்... மேலும் பார்க்க

உணர்வுப்பூர்வ சந்திப்பு: மும்பையில் வழித் தவறிய தாய் - 12 ஆண்டுகளுக்குப்பின் சேர்ந்து வைத்த போலீஸ்

மும்பையில் ஏராளமானோர் யாசகம் பெற்று வாழ்கின்றனர். அவர்களில் பலர் தங்களது குடும்பத்தை விட்டு பிரிந்தவர்களாகவோ அல்லது உறவுகள் அற்றவர்களாகவோ இருக்கின்றனர். அவ்வாறு மும்பையில் யாசகம் பெறுபவர்களை மீட்டு போ... மேலும் பார்க்க