ஆண்தாய் ஆனந்த் `டு' பிஸி ஆனந்த் - தவெக செயல் வீரர்கள் கூட்டத்தின் கலகல மொமென்ட்ஸ...
காலத்தால் அழியாத நற்பெயரையும் புகழையும் ஈட்டுவது எப்படி? - மனிதத்தின் உண்மையான முகம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
காலத்தின் நவரசங்கள் வாழ்க்கையாக இருக்கலாம். அந்த நவரசங்களில் ஒன்று கூடினாலோ குறைந்தாலோ வாழ்வது தான் கடினம். சுதந்திரமாக பறக்கும் பறவைகளுக்கு எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும்.
இலக்கு இல்லாத வாழ்க்கை சுவாரசியமாக இருக்காது. இங்கு வாழ்கின்ற உயிர்களும் சரி.. மனிதனும் சரி.. வாழ்க்கையின் ஆழத்திற்கு சென்று மீண்டு வரும்போது தான் வாழ்க்கைக்கான அர்த்தத்தையே புரிந்துக் கொள்ள முடிகிறது. மனிதன் என்பவன் யார்? மனிதம் என்பது என்ன?
பூ விற்கும் மூதாட்டி ஒருவர், பூக்களை விற்பனை செய்வோரிடம் புன்னகை பூத்த முகத்துடன் நீடுழி வாழ்க என்று சொல்லும் போது, ஒரு வித உவகையோடு அன்றைய நாள் இருக்கும். இது தான், அவர்கள் நம்மிடம் காண்பிக்கும் மனிதம். இது போன்ற உள்ளம் கொண்டவர்களே மனிதர்களாகிறார்கள்.

மனிதம் என்ற சொல்லுக்கான அர்த்தத்தை புரிந்து கொள்பவனே மனிதன். கிட்டத்தட்ட மனிதன் - மனிதம் இரண்டும் ஒரே அர்த்தமாக தான் இருக்க முடியும். மனித விழுமியத்தின் கதவை திறந்து பார்த்தாலே, ஒழுக்கமும் வாழ்வும் சீர்படும். விழுமியம் என்பது ஒரு மனிதனின் எண்ணம், நம்பிக்கை, கருத்து போன்றவற்றை சரியான பாதையில் பின்பற்றுவது.
பணம் என்றால் பிணம் கூட வாய் பிளக்கும் என்று ஒரு பழமொழி உண்டு.. சமூகத்தில் சராசரி ஒரு மனிதனின் மதிப்பு அவனிடம் உள்ள பணத்தை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. தனக்காக மட்டுமின்றி மற்றவர்களின் நலனுக்காகவும் உழைப்பவர்கள் மாமனிதர் ஆகிறார்கள். இவர்கள் தான் இளைஞர்கள் பட்டாளத்திற்கு தூண்டுதலாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறார்கள்.
இந்த உலகில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. நாம் விட்டு சென்ற எழுத்துகளையும், மதிப்பையும், புகழையும் தவிர.. மீதம் எல்லாமே தற்காலிகம் தான். அன்பு, மகிழ்ச்சி போன்றவையெல்லாம் தற்காலிகம் என்ற போது தான் வருத்தமாக இருக்கும்.

நரை முதிர்ந்த பாட்டியின் பாதத்தில் முள் குத்திவிடுகிறது. தன் பார்வை மங்கிய கண்களால் கைகளில் உள்ள சிறிய ஊசியினால் அதை தடவி கணவன் எடுக்கின்ற போது, அவர்களது இருவரது மனதிலும் ஆழமான அன்பு அழகாய் தோன்றும். "மகிழ்ச்சியே வாழ்க்கையின் அர்த்தமும் நோக்கமும், மனித இருப்பின் முழு நோக்கமும் முடிவும் ஆகும்" என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. மகிழ்ச்சி வகை ஒவ்வொருத்தருக்கும் மாறுபடும். ஒருவனே பல வடிவங்களில் மகிழ்ச்சியை உணர்கின்றான்.
உதாரணமாக, ஒருவருக்கு சுற்றுலா செல்வது மகிழ்ச்சியைத் தரும்.. இது ஒரு வகை மகிழ்ச்சி.. யாருடன் செல்வது கூடுதல் மகிழ்ச்சியைத் தரும்? என்பது வடிவம்.. எப்போதுமே புன்னகை முகத்துடனே இருக்கின்ற ஒரு முதியவரிடம், ஒரு இளைஞன் கேட்கிறான்: உங்களுக்கு துன்பம் என்பதே கிடையாதா? நீங்கள் தான் மகிழ்ச்சியான மனிதராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கு முதியவரின் பதில், புண்பட்டவனின் மனதை அவனே சமாதானப்படுத்தும் கருவி தான் புன்னகை.
ஒருவன் எவ்வளவு மெனளமாக புன்னகை புரிகிறனோ? அவ்வளவு அதிகமாக துன்பத்தை அனுபவித்திருப்பான். ஒரு சிலருக்கு அந்த முகம் இயற்கையாகவே இருக்கிறது.. அது கடவுள் கொடுத்த வரம் என்று புன்னகைத்து கொண்டே கூறினார்.

அனுபவமே சிறந்த ஆசான் என்று கூறுவார்கள். அனுபவம் நமது தவறுகளை திருத்திக் கொள்ளவும் செய்கிறது. ஒரு விஷயத்தை கற்றுக் கொள்ளவும் செய்கின்றது. இதைத் தான் அனுபவ அறிவு என்கிறோம். ஒருவன் வளர்கின்ற சூழ்நிலை, கற்றுக்கொள்ளும் செயல், மனதில் உள்வாங்கும் விஷயம் இவற்றை பொறுத்தே, அவன் நல்ல அனுபவங்களை பெற்றிருப்பானா? என்பதை கூற முடியும். நல்ல அனுபவங்களை பெற்றிருந்தால் மட்டுமே சிறந்த அனுபவசாலியாக இருக்க முடியும்.
ஒரு மனிதனின் அனுபவம் அவன் இலக்கை அடைய துணை புரிகிறதா? என்று கேட்டால் நிச்சயம் துணை புரியும். பூப்பந்து விளையாட்டு வீரர் ஒருவர் விளையாடுகின்ற போது, அவர் பலமுறை தோல்வி அடைந்துள்ளார். சர்வதேச அளவில் அவர் விளையாடிய போது வெற்றி பெற்று விட்டார். அப்போ, அவர் தோல்வி அடைந்த போது, தான் பெற்ற அனுபவத்தையும், தோற்றதற்கான காரணத்தை ஆராய்ந்த தால் தான், சர்வதேச அளவில் வெற்றியும் பெற்றார்.
நம் கண்களில் உள்ள லேக்ரிமல் சுரப்பி சுரக்கின்ற கண்ணீரில் வலி மிகுந்த பாதையின் பயணங்கள் நிறைந்திருக்கும். வலி மிகுந்த பாதையிலும் நல்ல எண்ணங்களே நம்மை வலிமை படைத்தவனாக வைத்திருக்கும். நல்லதையே நினைத்து, நல்லதையே செய்தால் வாழ்வின் பயணம் இனிதாய் இருக்கும்.
சி. ஹரிசுவேதா.,
சேலம் மாவட்டம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



















