செய்திகள் :

காவிரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி; வீடியோ மோகத்தால் நிகழ்ந்த துயரம்

post image

காவிரி ஆற்றுக்கு சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், மாண்டியா மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி ஆறு
காவிரி ஆறு

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தைச் சேர்ந் விஜயம்மா (50), ஸ்வேதா (38), பிரியங்கா (28) மைத்ரா (20), மகேஷ் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் 5 பேரும் மாண்டியா மாவட்டம் மலவல்லி தாலுகாவிலுள்ள முத்தத்தியில் உள்ள முத்தத்தி ராயா கோயிலுக்குச் சென்றனர். அங்கு வழிபட்ட பின்னர் அந்தப் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றைக் காண சென்றவர்கள். ஆழம் தெரியாமல் ஆற்றில் இறங்கி மொபைலில் விதவிதமாக வீடியோ, போட்டோ, செல்ஃபி எடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்
உயிரிழந்தவர்கள்

அப்போது எதிர்பாராதவிதமாக ராஜம்மா ஆற்றில் ஆழத்தில் சிக்கிக் கொள்ள அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற மற்ற 4 பேரும் ஆழமான பகுதிக்குச் சென்று தப்பிக்க முடியாமல் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

இதைப் பார்த்த அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி இறந்த ஐந்து பேரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மாண்டியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முத்தத்தியில் காவிரி ஆறு பாயும் பகுதி அதிக ஆழமான அபாயகரமான பகுதி என்பதால் யாரும் ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று அங்கு எச்சரிக்கை பலகை வைத்தும், ஆபத்தை உணராமல் செல்பி மோகத்தால் இதுபோன்ற துயரங்கள நிகழ்வதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Venezuela: வெனிசுலா இரட்டை நிலநடுக்கம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்; அவசர நிலை அறிவித்த அதிபர்!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தலைநகர் காரகாஸ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் இந... மேலும் பார்க்க

`அப்பா, என்னைக் காப்பாத்துங்க' - லக்னோ தீயில் கருகிய மகனின் கடைசி அழைப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!

“அப்பா, இங்க தீப்பிடிச்சிருச்சு, என்னைக் காப்பாத்துங்க!” - இது வெறும் வார்த்தைகள் அல்ல. லக்னோ தீயில் கருகிப் போன 23 வயது இளைஞன் சுக்மணி சிங்கின் மரண ஓலம். திங்களன்று வடமேற்கு லக்னோவின் அலிகஞ்ச் பகுதிய... மேலும் பார்க்க

திருவள்ளூர் இறால் தொழிற்சாலை அமோனியா கசிவு: உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு; மூவர் கைது!

நேற்று (ஜூன் 21, 2026) திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அங்கு வேலை செய்துகொண்டிருந்த 60-க்கும் மேற்பட்டோர் ... மேலும் பார்க்க

அமோனியா கசிவு: "தமிழ்நாட்டை நம்பி வந்த பிள்ளைகள்... கண், காது, மூக்கில் ரத்தம் வந்து..." - பிரேமலதா

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

அமோனியா கசிவு: "பாதிக்கப்பட்டவர்களின் முகம் வீங்கியிருக்கிறது; நுரையீரலும்..." - அமைச்சர் அருண் ராஜ்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க

அமோனியா கசிவு: "இருவர் உயிரிழப்பு; 23 பேர் ஐ.சி.யூ-வில்... விபத்துக்கு இதுதான்...' - அமைச்சர் குமார்

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் இன்று அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத... மேலும் பார்க்க