T20 WC: வருண் சக்ரவர்த்தி மாயாஜாலம்: தோல்வியே சந்திக்காத அணியாக சூப்பர் 8-க்குள்...
``'கிங்' பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல; பொறுப்பு" - ஷாருக்கான்
பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் `கிங்' கான் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். தற்போது ஷாருக்கான் தனக்கு வழங்கப்பட்டுள்ள கிங் பெயரில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாருக்கான் மகள் சுஹானா கானும் நடிக்கிறார்.
ஷாருக்கானுக்கு வழங்கப்படும் கிங் பட்டம் குறித்து குறித்து அவரிடம் ஒரு முறை நிருபர்கள் கேட்டதற்கு, ''எனக்கு 'கிங்' என்ற சொல் ஒருபோதும் அதிகாரத்தைக் குறித்தது கிடையாது. அது எப்போதும் ஒரு பொறுப்பு சார்ந்த விஷயம். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் மக்களுக்கும், நான் சொல்லத் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் உண்மையாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பை அது உணர்த்துகிறது."என்று தெரிவித்தார்
1989-ல் 'பௌஜி' (Fauji) என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் அறிமுகமான ஷாருக்கான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக 'பாலிவுட் கிங்' மற்றும் 'பாட்ஷா' போன்ற மகுடத்துடன் பாலிவுட்டில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். சினிமா மட்டுமல்லாது கிரிக்கெட் தொழிலும் ஈடுபட்டுள்ளார். தனது பாலிவுட் தோழி ஜுஹி சாவ்லாவுடன் இணைந்து கொல்கத்தா நைட் ரடர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார்.

பெண்களுக்கு முன்னுரிமை
பாலிவுட் இயக்குநர் அனுபவ் சின்ஹா ஷாருக்கானின் பண்பு குறித்துப் பேசுகையில், ``பாலிவுட்டில் ஒரு பெரிய மாற்றத்தை ஷாருக்கான் ஒற்றை ஆளாக நிகழ்த்தினார். ஷாருக்கான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு, கதாநாயகிகள் படியில் ஏறும்போது கைகொடுத்து உதவுவது போன்ற கண்ணியமான செயல்களை எந்த ஒரு நாயகனும் செய்ததை தான் பார்த்ததில்லை.
ஆனால் பல ஆண்டுகளாக ஷாருக்கான் இதைத் தொடர்ந்து செய்து வந்ததால், இன்று அது திரைத்துறையில் ஒரு சாதாரணமான, அதே சமயம் போற்றத்தக்க நடைமுறையாக மாறியுள்ளது. 2013-ஆம் ஆண்டிலிருந்து தனது படங்களின் டைட்டில் கார்டில் (Credits), தனது பெயருக்கு முன்பாகவே கதாநாயகிகளின் பெயரை இடம்பெறச் செய்யும் வழக்கத்தை ஷாருக்கான் கொண்டு வந்தார். இது திரைத்துறையில் நிலவும் போக்கை மாற்றியது''என்று குறிப்பிட்டார்.





















