செய்திகள் :

கிரிக்கெட்: 'ஆஸ்திரேலியா' என்னும் அசுர சக்தி; இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக சாம்பியன் பட்டம்!

post image

கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பைகளைத் தன்வசப்படுத்தி, கோப்பைகளின் மீது தங்களது பெயர்களை நிரந்தரமாகப் பொறித்துக் கொள்வதில் ஆஸ்திரேலிய அணிக்கு நிகர் ஆஸ்திரேலியா மட்டுமே! அது ஆடவர் அணியாக இருந்தாலும் சரி, மகளிர் அணியாக இருந்தாலும் சரி, மகுடம் சூடுவதில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை திருவிழா, நேற்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை, அவர்களது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தைத் தன்வசமாக்கியுள்ளது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா அணி

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் திணறடித்தது ஆஸ்திரேலியா. தொடக்க வீராங்கனைகள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த நாட் ஸ்கிவர்-பிரண்ட் (58 ரன்கள்) மற்றும் ஃப்ரெயா கெம்ப் (44 ரன்கள்) என நிதானமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணி

151 ரன்கள் எடுத்தால் உலக சாம்பியன் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, பெத் மூனி மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அதிரடியான தொடக்கத்தை அமைத்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் வியூகங்களை தவிடுபொடியாக்கிய இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால், ஆஸ்திரேலியா 17.1 ஓவர்களிலேயே 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி, கம்பீரமாக கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7-வது முறை உலகக்கோப்பையை வென்ற ஒரே அணி என்ற மகத்தான சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், அங்கே ஆஸ்திரேலியாவின் மஞ்சள் நிறக் கொடி மட்டுமே உயர்ந்து பறப்பதை காண முடியும்.

இதுவரை நடந்த 10 உலகக்கோப்பை தொடர்களில், 7 முறை ஆஸ்திரேலியா மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்றால், இவர்களின் ஆதிக்கம் எந்தளவுக்கு அசுரத்தனமானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியா அணி

ஆஸ்திரேலியா மகளிர் அணியின் சாம்பியன் பயணம்:

1) 2010 நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல்முறை முத்திரை பதித்தனர்.

2) 2012 இங்கிலாந்தை வீழ்த்தி

இரண்டாவது முறை கோப்பை.

3) 2014 மீண்டும் இங்கிலாந்தை வீழ்த்தி சாதனை.

4) 2018 இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி 4-வது முறை சாம்பியன்.

5) 2020 மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவை வீழ்த்தி 5-வது முறை மகுடம்.

6)2023 தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 6-வது முறை கோப்பை.

7)2026 தற்போது மீண்டும் இங்கிலாந்தை வீழ்த்தி 7-வது முறையாக உலகக்கோப்பையை அறுவடை செய்துள்ளனர்.

முடியாத தொடர்கதை!

இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா ஒரு கோப்பையை வென்றுள்ளது, ஆனால் ஆஸ்திரேலியா 7 கோப்பைகளுடன் எட்டாத உயரத்தில் நிற்கிறது. உலகக்கோப்பைகளை அறுவடை செய்வதில், ஆஸ்திரேலியாவின் ஆடவர் அணியும்,மகளிர் அணியும் இன்றளவும் உலக கிரிக்கெட்டின் அசைக்க முடியாத அணியாக திகழ்கின்றன.

Rohit Sharma: 'நான் ஓய்வுபெறுகிறேனா?' - ரோஹித் சர்மா அளித்த விளக்கம் என்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இங்கிலாந்... மேலும் பார்க்க

இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியுடன் ரோஹித் ஓய்வு பெறுகிறாரா?- விளக்கம் அளித்த பிசிசிஐ செயலாளர்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் (ODI) போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியானது.இந்தத் தகவல்கள் அதிர்ச... மேலும் பார்க்க

`இது சரித்திரத் தருணம்!' - லார்ட்ஸில் பேட்டிங், பவுலிங் என சகலத்திலும் மிரட்டிய ஹர்மன்பிரீத் படை!

லண்டனின் புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 270 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சரித்திர வெற்றி படைத்திருக்கிறது ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மக... மேலும் பார்க்க

CSK: 18 ஆண்டுகாலப் பயணம்; 5 முறை கோப்பை வென்ற பயிற்சியாளர் - சிஎஸ்கேவில் இருந்து விலகிய ஃப்ளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 200... மேலும் பார்க்க

'டிரான்சிஷன் ஃபேஸில் இருக்கிறோம்!' - தொடர் படுதோல்விக்கு கேப்டன் ஷ்ரேயாஸ் விளக்கம்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி படுதோல்வியுடன் இழந்துள்ளது. மூன்றாவது போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அணியின் தொடர் சொதப்பல்களுக்குக் காரணம் என்ன என்பது குறித்த... மேலும் பார்க்க

போர்க்களத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் வரை.! - உயிரிழந்த ஆப்கான் வீரர் ஷபூர் ஜத்ரானின் பயணம்

போர் பதற்றத்துக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் மத்தியில் வாழும் ஆப்கானிஸ்தானில் இருந்து உலக கிரிக்கெட்டில் அந்த நாட்டின் அடையாளத்தைப் பதித்த சிறந்த வீரர்களில் ஒருவர்தான் ஷபூர் ஜத்ரான். அரிய வகை நோயால்... மேலும் பார்க்க