செய்திகள் :

குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி..!

post image

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சாதனையை குறைவான போட்டிகளிலே லியோனல் மெஸ்ஸி முறியடித்தார்.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

மினசோட்டாவில் அலையன்ஸ் ஃபீல்ட் திடலில் நடைபெற்ற போட்டியில் இன்டர் மியாமி, மினசோட்டா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 48-ஆவது நிமிஷத்தில் அசத்தலான கோல் அடித்தார்.

இந்த கோலின் மூலமாக தனது 860-ஆவது கோலை நிறைவு செய்தார்.

சாதனை நிகழ்த்திய மெஸ்ஸி

இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 1- 4 என தோல்வியுற்றது. இருப்பினும் மெஸ்ஸி அடித்த கோல் வரலாற்றுச் சாதனையாக மாறியிருக்கிறது.

கால்பந்து தொடரில் அதிகமான கோல்கள் (934) அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 860ஆவது கோலை கடந்த 2023ஆம் ஆண்டு அல்நசீர் அணிக்காக அக்.1ஆம் தேதி அடித்தார். இந்த கோல் அவரது 38ஆவது வயதில் 1,189ஆவது போட்டியில் அடித்திருந்தார்.

லியோனல் மெஸ்ஸி தனது 860-ஆவது கோலை 37 வயதில் 1,098ஆவது போட்டியிலேயே அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் மார்கன் வெளியீட்டுத் தேதி!

விஜய் ஆண்டனி நடித்துள்ள புதிய படமான ‘மார்கன்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கதாநாயகனாக தனது 12-வது படமான ‘ககன மார்கன்’ திரைப்படத்தில் நடி... மேலும் பார்க்க

கிஸ் வெளியீடு அறிவிப்பு!

நடிகர் கவின் நடிப்பில் உருவான கிஸ் திரைப்படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோரின் நடிப்பில் ‘கிஸ்’ எனும் புதிய படம் உர... மேலும் பார்க்க

விடாமுயற்சி, வீர தீர சூரன் வெற்றிப்படங்கள் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்

இந்தாண்டு வெளியான திரைப்படங்களின் வெற்றி, தோல்வி குறித்து பிரபல திரையரங்க உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியம் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் இந்தாண்டு இதுவரை வெளியான திரைப்படங்களில் ஒரு சில படங்களே ரசிக... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி இழப்பீடு வேண்டும்... சிக்கலில் சந்தானம் படம்!

நடிகர் சந்தானத்தின் புதிய படத்திற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் உருவான ப... மேலும் பார்க்க

கனா தொடர் நாயகிக்கு ஆண் குழுந்தை!

மருத்துவரும் தொடர் நடிகையுமான தர்ஷனா அசோகனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நீதானே எந்தன் பொன் வசந்தம் தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தர்ஷனா அச... மேலும் பார்க்க