செய்திகள் :

``கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா `இதில்' உதவும்'' - புதின் அறிவிப்பு

post image

இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடந்தது.

அதில் புதின் பேசியதாவது,

"இந்தியாவும், ரஷ்யாவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றி வருகிறது. இதற்கு இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி நடக்கும் தொலைபேசி அழைப்புகளும், இருதரப்பு உறவின் தொடர் கண்காணிப்புகளும் முக்கியச் சாட்சி.

கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கு இடையேயும் கிட்டத்தட்ட 12 சதவிகிதம் அளவிற்கு (64 பில்லியன்‌ டாலர்கள்) வர்த்தகம் அதிகரித்துள்ளது. அது இந்த ஆண்டும் வலுவாக தொடர்ந்து வருகிறது.

இதில் சுமார் 96 சதவிகித வர்த்தகம் இரு‌நாடுகளின் தேசிய நாணயங்கள் மூலமே நடந்துள்ளது.

மோடி - புதின்
மோடி - புதின்

கூடங்குளம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மீதம் உள்ள உலைகளை கட்டி முடிக்க இந்தியாவிற்கு ரஷ்யா உதவும்.

அணு மின் துறை தாண்டி, மருத்துவம், விவசாயம் ஆகியவற்றிலும் இந்தியா, ரஷ்யா இணைந்து செயல்படும்.

ரஷ்யா இந்தியாவின் நம்பகமான எண்ணெய், எரிவாயு சப்ளையராக தொடரும். வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து எரிசக்தி கிடைப்பதை ரஷ்யா உறுதி செய்யும்" என்றார் புதின்.

திருப்பரங்குன்றம் விவகாரம்: ``இன்னொரு இடத்தில் தீபம் எதற்கு?'' - அமைச்சர் சேகர் பாபு கேள்வி

சென்னையில் இன்று (டிச.6) செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசியிருக்கிறார். " திமுக அரசு சட்டத்தை மதிக்கின்ற அரசு. அதுமட்டுமின்... மேலும் பார்க்க

'வேட்பாளரையும் கடன் கேட்கும் காங்கிரஸ்’ - அமைச்சர் தொகுதிக்கு திமுக, காங்கிரஸ் குஸ்தி

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்துப் பேசுவதற்காகக் கிரிஷ் சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் ஹெக... மேலும் பார்க்க

``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம்

இந்திய பயணம்‌‌ முடிந்து ரஷ்ய அதிபர்‌ புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.மோடி பேச்சுஇந்தியா - ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர்‌ மோடி பேசியதாவது,"கடந்த எ... மேலும் பார்க்க

``எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இபிஎஸ், ஓபிஎஸ் அதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க