செய்திகள் :

கேரவனில் நடந்த துயரம்..! மீட்சியடைந்த தருணம் குறித்த பேசிய தமன்னா!

post image

நடிகை தமன்னா தனது கேரவனில் நடந்த துயரத்தில் இருந்து எப்படி மாறினேன் என அதன் முக்கியத்துவம் குறித்தும் பேசியுள்ளார்.

சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமன்னா அதில் பேசியதாவது:

நான் எனது கேரவனில் (நடிகைகளின் ஒப்பனை, ஓய்வறை) இருக்கும்போது எனக்கு விரும்பத்தகாதது நடந்தது. அதனால் மிகவும் வருத்தமடைந்தேன். எனது கண்கள் குளமாகின. நான் கண்ணிமைகளுக்கு மஸ்காராவும் (கண்ணிமை மயிர்களுக்குச் சாயம் ஊட்டுவதற்கான கலவை மருந்து) முகம் முழுக்க ஒப்பனையுடனும் இருந்தேன்.

நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதனால் அப்போது அழ முடியாது. அப்போது எனக்கு நானே ’இது ஒரு உணர்ச்சிதான். இதை நான் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்’ என சொல்லிக்கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். பின்னர் என்னை நானே நிலைக் கண்ணாடியில் பார்த்தேன், அது நிச்சயமாக எனக்கு வேலை செய்தது என்றார்.

தமிழின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என பலருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார் தமன்னா. ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

தமன்னா சமீபத்தில் நெட்பிளிக்ஸில் சிக்கந்தர் கா முகாதுர் என்ற படத்தில் நடித்திருந்தார். ஸ்ட்ரீ-2 படத்தில் ஆஜ் கி ராட் என்ற பாடலில் நடனமாடியிர்ந்தார். இந்தப் பாடல் 78 கோடி (780 மில்லியன்) பார்வைகளைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

அசோக் தேஜா இயக்கத்தில் ஒடேலா 2 படத்திலும் தமன்னா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவ சக்தியாக நடித்துள்ளார். தமிழில் கடைசியாக அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார்.

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.15-02-2025சனிக்கிழமைமேஷம் இன்று மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்... மேலும் பார்க்க

ஹைதராபாதை வீழ்த்தியது ஒடிஸா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. ஒடிஸாவுக்கு இது 7-ஆவது வெற்றி; ஹைதராபாதுக்கு இது 12-ஆவது தோல்வி. இந்த... மேலும் பார்க்க

மூனி, காா்டனா் அதிரடி: குஜராத் 201/5

மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிராக குஜராத் ஜயன்ட்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் சோ்த்தது. இந்த ... மேலும் பார்க்க

உயிர் பத்திக்காம... வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியானது!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. கார்த்தி நடிப்பில் கடைசியான வெளியான மெய்யழகன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமானது.இதனைத் தொடர... மேலும் பார்க்க