செய்திகள் :

கைநழுவிய வேட்டை... கால் நழுவிய சிங்கம்! 15 அடி ஆழக் கிணற்றில் ஒரு மணி நேரத் திக் திக்! | Viral Video

post image

வேட்டைக்காகப் பாய்ந்த வேகம், அடுத்த நொடியே ஒரு சிங்கத்தின் வாழ்வா சாவா போராட்டமாக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டத்தில், ஒரு எருமை மாட்டை வேட்டையாட அந்த ஆசிய சிங்கம் மின்னல் வேகத்தில் துரத்தியது.

இருட்டில் இலக்கை மட்டுமே குறிவைத்து ஓடியதால், முன்னால் இருந்த 15 அடி ஆழ கிணற்றை அது கவனிக்கவில்லை. எருமை தப்பி ஓட, பாய்ந்த வேகத்தில் நிலைதடுமாறிய சிங்கம் நேராகக் கிணற்றுக்குள் விழுந்தது.

இருண்ட கிணற்றுக்குள் சிக்கிக்கொண்ட காட்டின் ராஜாவின் ஒவ்வொரு கர்ஜனையும், தன்னை மீட்கச் சொல்லி விடுத்த ஒரு கம்பீரமான அழைப்பாகவே அந்த கிராமம் எங்கும் எதிரொலித்தது.

தகவல் அறிந்ததும் அங்கு வந்த வனத்துறையினர், ஒரு நொடியும் தாமதிக்காமல் மீட்புப் பணியில் குதித்தனர். கிணற்றின் ஆழம் மற்றும் சிங்கத்தின் ஆக்ரோஷம் எனப் பல சவால்கள் இருந்தபோதிலும், அதிகாரிகள் மிகவும் சாமர்த்தியமாகச் செயல்பட்டனர். சுமார் ஒரு மணி நேரத் திக் திக் போராட்டத்திற்குப் பிறகு, கயிறுகள் மற்றும் இரும்புக் கூண்டுகளைப் பயன்படுத்தி அந்தச் சிங்கத்தைப் பத்திரமாக மேலே தூக்கினர்.

அதிர்ஷ்டவசமாக, அவ்வளவு ஆழத்தில் விழுந்தும் அந்தச் சிங்கத்திற்குச் சிறு காயம் கூட ஏற்படவில்லை.

மீட்கப்பட்டவுடன் அதற்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அது முழு ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட அந்த கம்பீர ராஜா, அன்று இரவே மீண்டும் காட்டின் அடர்ந்த பகுதிக்குள் பத்திரமாக விடுவிக்கப்பட்டான். மரணத்தின் விளிம்பு வரை சென்று, மனிதர்களின் துணையோடு மீண்டும் தன் சாம்ராஜ்யத்திற்குத் திரும்பிய அந்த சிங்கத்தின் கதை, ஒரு உண்மையான 'சர்வைவல்' த்ரில்லர்!

`பிரேக்-அப்பை விடவும் அதிக வலி...'- 60 நிமிடங்களில் கைநழுவிய வாடகை வீடு; இளம்பெண்ணின் வைரல் பதிவு!

இது பெங்களூரு பாஸ்... இங்கே ஆள விடுறதை விட வீடு போனா வலி அதிகம்! - வாடகை வீட்டின் மறுபக்கத்தை பகிர்ந்த பெண்ணின் குமுறல்!இந்தியாவின் சிலிக்கான் வேலி, கனவுகளின் தலைநகரம் என பல பெயர்களில் அழைக்கப்படும் ப... மேலும் பார்க்க

சம்பளப் பிரச்னை; போர்க்களமாக மாறிய நொய்டா; போராட்டத்தில் ஈடுபட்ட 300 தொழிலாளர்கள் கைது

டெல்லி அருகில் உள்ள நொய்டாவில் மாருதி காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனிகள் அதிக அளவில் இருக்கின்றன. இதுதவிர நொய்டா மற்றும் காசியாபாத்தில் அதிக அளவில் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ப... மேலும் பார்க்க

டொனால்டு ட்ரம்ப்பின் சரச்சைப் பதிவு; படத்தை நீக்கியதற்கு விளக்கமளித்த ட்ரம்ப்

அமெரிக்கா மத்திய கிழக்கில் உள்ள ஈரான் மீது நடத்திய தாக்குதலுக்கு உலக நாடுகள் ஆதரவு கொடுக்க மறுத்துவிட்டன. இஸ்ரேலும், அமெரிக்காவும் இப்போரில் பின்னடைவைச் சந்தித்ததாகவே உலக நாடுகள் கருதுகின்றன. மற்றொருப... மேலும் பார்க்க

`நண்பர்கள் மஞ்சள் மாத்திரை கொடுத்தார்கள்' இசை நிகழ்ச்சியில் போதை; மாணவர்கள் உயிரிழப்பு

மும்பை கோரேகாவ் நெஸ்கோ கண்காட்சி மையத்தில் ''999999999 Music Concert” என்ற பெயரில்இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியைக் காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதில் தென்... மேலும் பார்க்க

ஜனநாயகன் படத்தை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய உள்ளூர் தொலைக்காட்சி – உரிமையாளர் கைது, அலுவலகத்திற்கு சீல்!

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் மத்திய தணிக்கை சான்று பெறாமல் நிலுவையில் இருந்து வரும் நிலையில், சட்ட விரோதமாக ஆன்லைனில் கசிந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்... மேலும் பார்க்க

Asha Bhosle: மறைந்த இசை அரசி; அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட ஆஷா போஸ்லே உடல்!

இந்தி உட்பட 20க்கும் மேற்பட்ட மொழிப் படங்களில் பாடியிருக்கும் பாடகி ஆஷா போஸ்லே நேற்று மும்பை மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மறைந்த இசைக்குயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முத... மேலும் பார்க்க