செய்திகள் :

'கொளத்தூர் தொகுதியை சேகர் பாபுவிடமிருந்து பறிக்கும் திமுக?' - கட்சி மறுசீரமைப்பை தொடஙகிய ஸ்டாலின்!

post image

கட்சி மாவட்ட எண்ணிக்கையை 110-ஆக உயர்த்தி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் பட்டியலை அறிவித்திருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், கொளத்தூர் தொகுதியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சேகர்பாபுவிடமிருந்து பறிக்க தி.மு.க தலைமை முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

திமுக செயற்குழு

ஆகஸ்ட் 22-ம் தேதி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க-வின் செயற்குழுவில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அமைப்புரீதியாக மாவட்டங்கள் 110 எண்ணிக்கையாக உயர்த்தப்பட்டு, மாவட்டச் செயலாளர்களின் வயது உச்ச வரம்பு 70-ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் 110 மாவட்டங்களை வரையறுத்து புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.

‘தலைநகர் சென்னை, தி.மு.க-வின் கோட்டை’ என்ற நிலையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள். மொத்தமுள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளின்கீழ் வரும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்று மீதித் தொகுதிகளில் மண்ணைக் கவ்வியிருக்கிறது தி.மு.க. அதிலும் தி.மு.க தலைவர் ஸ்டாலினே கொளத்தூரில் வெற்றி வாய்ப்பை த.வெ.க-விடம் பறிகொடுத்தது உடன்பிறப்புகளை உஷ்ணமாக்கியிருந்தது.

நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர்கள், "சென்னையில் தி.மு.க சறுக்கியதையும் கெளத்தூரில் தோற்றத்தையும் ரொம்பவே சீரியஸாக எடுத்துக் கொண்டார் தலைவர் ஸ்டாலின். கழக மாவட்ட மறுவரையறையில் தலைநகர் சென்னையை 10 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் வடசென்னை மாவட்ட பிரிப்பு பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. திருவெற்றியூர், மாதவரம் தொகுதிகளை சென்னை வடகிழக்கு மாவட்டமாகவும், பெரம்பூர், கொளத்தூர் தொகுதிகளை சென்னை வடக்கு மாவட்டமாகவும் துறைமுருகம், திரு.வி.க நகர், வில்லிவாக்கம் தொகுதிகளை சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு துறைமுகம், கொளத்தூர் என இரண்டு தொகுதிகளையும் பார்த்துக் கொண்டார் சேகர்பாபு. தற்போதைய மறுசீரமைப்பில் கொளத்தூர் சென்னை வடக்கு மாவட்டத்தில் துறைமுகம் சென்னை கிழக்கு மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது" என்றனர்

சேகர்பாபு

தி.மு.க தலைமைக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம் "சேகர்பாபுவிடமிருந்து கொளத்தூர் தொகுதியை பறிக்கவே கொளத்தூரையும் துறைமுகத்தையும் தனித்தனி மாவட்டங்களில் இடம்பெற செய்திருக்கிறார் தலைவர். கொளத்தூரில் தலைவர் ஸ்டாலின் தோற்றதால் 'சேகர்பாபுமீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குரல் எழுந்த நிலையில் கொளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு அவரிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது. எந்த மாவட்டங்களுக்கு யார் செயலாளர் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும்" என்றனர்

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க