செய்திகள் :

`கோயில் நிலத்தை முதல்வர் விஜய் தனக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார்’- குற்றம்சாட்டும் நயினார்

post image

கோவை பீளமேடு பா.ஜ.க அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நான்கு கோயில்களின் ரூ. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலத்தை 9ம் தேதி மாவட்ட ஆட்சியர், இணை ஆணையரால் பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாகவே அவசர அவசரமாக பட்டா போட்டுக் கொடுத்திருக்கின்றனர். முதலமைச்சர் ஜோசப் விஜய்,  இந்து கோயில்களின் நிலத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்து இருக்கின்றாரா? இதற்கு உறுதுணையாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இருக்கிறாரா? எதற்காக இந்த அவசரம்? முதல்வர் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு கொடுத்திருக்கிறார். பா.ஜ.க சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

பணம் கொடுப்பது மட்டும் லஞ்சம் இல்லை. தனக்கு வேண்டியவர்களுக்கு செய்யும் உதவிகூட லஞ்சம்தான். விஜய் கூட்டத்திற்கு வந்து இறந்தவர்களுக்கு மட்டும் வேலை வழங்கியிருப்பதும் ஒரு லஞ்சம் தான். ஒரே நாளில் 3,085 ஏக்கர் நிலத்தை கொடுப்பது எந்த அடிப்படையில்? இதுவும் ஒரு விதத்தில் லஞ்சம் தான். கரூர் சம்பவத்தில் இறந்த 41 பேர் குடும்பத்தினருக்கு அரசு வேலை ஆணை வழங்கியிருக்கிறார். சாலை விபத்தில் மரணம் அடைந்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். மின்சாரத் துறை, போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத் துறை என ஏராளமான துறைகளில் வாரிசுகள் ஆயிரக்கணக்கான பேருக்கு வேலை வழங்க வேண்டி இருக்கிறது. குரூப் ஒன் உட்பட பல்வேறு தேர்வுகளில் படித்து தேர்வு எழுதியவர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பு முன்னுரிமை கொடுக்கவில்லை. இப்போது பணி கொடுத்தது தவறு இல்லை. ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் அவர்களுக்கு கொடுத்திருந்தால் சரியாக இருக்கும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

கரூரில் முதல்வர் பேசியதை அரசு பள்ளியில் ஒளிபரப்பு செய்தது போன்ற சம்பவங்கள் இதுவரை நடந்ததில்லை, சினிமாவில் தான் பார்த்திருக்கின்றோம். விஜய் வரும்போது பள்ளிக்கு விடுமுறை விடுவது, அவரது காட்சிகளை பள்ளியில் ஒளிபரப்புவது போன்றவை தவறான விஷயம், மாணவர்களை தவறான வழியில் எடுத்துச் செல்வது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தவறு எங்க நடந்தாலும் அது கண்டிக்க வேண்டியதுதான். அயோத்தி ராமர் கோயில் குறித்து இறுதி அறிக்கை வந்தவுடன் கண்டிப்பாக அது குறித்து பேசுவேன். மதிப்பிற்குரிய திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறார். தி.மு.க கூட்டணியில் இருந்தவர், த.வெ.க-விற்கு சென்றவுடன், அவரது பேச்சு மாறி இருக்கின்றது. தி.மு.க-வுடன் நட்புடன் இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். திருமாவளவன் என்ன எண்ணத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால் 2029 தேர்தலில் எல்லோரும் சேர்ந்து பா.ஜ.க-வை எதிர்க்க தயாராகின்றனர் என்பது தெரிகிறது.  பா.ஜ.க-வைப் பார்த்து அனைவரும் பயப்படுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

"தென்னிந்தியர்களும் வட இந்திய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும்"- ஆளுநர் அர்லேகர் பேச்சு

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கலந்துகொண்டிருந்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர... மேலும் பார்க்க

கரூர் பள்ளியில் ஒளிபரப்பான தவெக நிகழ்ச்சி; தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் உத்தரவு!

கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தவெக நிகழ்ச்சி, பள்ளியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார்... மேலும் பார்க்க

`களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? ஓடு... ஓடு... ஓடு' விஜய் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினருக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கி இருக்கி... மேலும் பார்க்க

`எமோஷனல் ஆன கரூர் குடும்பத்தினர்; கதறி அழுத முதல்வர் விஜய்!' - என்ன நடந்தது?

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமனத்தை முதல்வர் விஜய் இன்று கொடுத்திருந்தார். இந்த நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எமோஷனல் ஆக, அதைப் ப... மேலும் பார்க்க

'15 மணி நேர ஷிஃப்ட்; நோ லீவ்; கைக்கு வராத படி காசு!' - குமுறும் தீயணைப்பு காவலர்கள்!

தங்களுக்குப் பணிச்சுமை அதிகமாக இருப்பதாகவும், முறையாக ஷிஃப்ட்கள் ஒதுக்கப்படுவதில்லை என்றும் தீயணைப்பு காவல்துறையினர் புகார் கூறிவருகின்றனர்Fire Policeதங்களுக்குரிய பிரச்னைகள் குறித்து சில தீயணைப்புத்த... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: `மக்களை தவிக்கவிட்டு ஓடிப்போனவர்கள் யார் என்பது..!'- விஜய் பேச்சுக்கு கனிமொழி பதிலடி

கரூர் பெருந்துயர் சம்பவத்திற்குப் பிறகு, தமிழக முதல்வர் விஜய் இன்று முதன் முறையாக கரூர் மாவட்டத்துக்குச் சென்றார். மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முதல்வர் விஜய் முன்வை... மேலும் பார்க்க