செய்திகள் :

கோவை: சட்டவிரோதமாக மின்வேலியில் பாய்ச்சப்பட்ட மின்சாரம் - துடிதுடித்து உயிரை விட்ட காட்டு யானை!

post image

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை பொய்த்ததின் காரணமாக, வனப்பகுதிக்குள் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரங்களில் அருகில் உள்ள கிராமத்திற்குள் நுழைவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒற்றை ஆண் காட்டு யானை, மேட்டுப்பாளையம் அருகே வேடர் காலனியில் குமார் என்பவர் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது.

காட்டு யானை
காட்டு யானை

அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தைச் சுற்றிலும் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் காட்டு யானை சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்த சிறுமுகை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் குமாரின் தோட்டத்தை பாக்யராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதும், சட்ட விரோதமாக  உயர் அழுத்த மின்சாரத்தை மின்வேலியில் நேரடியாக செலுத்தியதே காட்டு யானை உயிரிழப்பிற்கு காரணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் குமார் மற்றும் குத்தகைதாரர் பாக்கிரராஜ் ஆகியோரைப் பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மசினகுடி: 11 நாளில் 3 பெண் யானைகள்; எல்-நினோ தாக்கத்தால் வறட்சியில் அடுத்தடுத்து மடியும் பேருயிர்

எல்-நினோ தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டுக்கான தென்மேற்கு பருவமழை பொய்த்திருக்கிறது. சமவெளி பகுதிகளுக்கு இணையாக ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதுடன் வற... மேலும் பார்க்க

கொசஸ்தலையாற்றில் கொத்துக்கொத்தாக செத்து மிதந்த மீன்கள் — எண்ணூர் பகுதியில் வெப்ப மாசு அச்சம்

சென்னை எண்ணூர் அருகே கொசஸ்தலையாறு மற்றும் எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் டன் கணக்கில் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்ப... மேலும் பார்க்க

`10 லட்சம் விதைப்பந்துகள் இலக்கு’ - வேலூர் மலைகளைப் பசுமையாக்க ஆர்வம் காட்டும் மென்பொருள் பொறியாளர்

வேலூர் சத்துவாச்சாரி அருகேயுள்ள ரங்காபுரத்தில் வசித்து வருபவர் தினேஷ் சரவணன். மென்பொருள் பொறியாளரான இவர்... கோடைக்காலத்தில் பறவைகளின் தாகம் தணிக்கத் தனித்துவமான ஏற்பாடு செய்தல், ஏரிக்கரைகளில் பனை விதை... மேலும் பார்க்க

கோவை அருகே ரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பு – யானைகள் தினத்தில் நடந்த சோகம்!

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு – கேரளம் எல்லைப்பகுதியான வாளையார் வனப்பகுதி வழியாக கேரளத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 யானைகள் கொண்ட ஒரு யானை... மேலும் பார்க்க

புனித நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம்... அமலைச் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பழநி சண்முகநதி!

பழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதிபழநி சண்முகநதி மேலும் பார்க்க

ஒரு மனிதன், ஒரு லட்சம் மரங்கள் - விவேக் விதைத்த கனவை நனவாக்கும் விழுப்புரம் சசி ராஜா

ஒரு நாட்டின் உண்மையான செல்வம் என்பது பணமும் கட்டடங்களும் அல்ல; நம்மைச் சுற்றியுள்ள பசுமையும், நாம் சுவாசிக்கும் சுத்தமான காற்றும்தான். ஆனால், நவீன நாகரிகத்தின் வளர்ச்சி என்ற பெயரில் நாம் நாள்தோறும் வெ... மேலும் பார்க்க