செய்திகள் :

கோவை : தொழிலதிபர் மாமனாரிடம் இருந்து 900 பவுன் நகைகளை திருடிய டாக்டர் மருமகன் – நடந்தது என்ன?

post image

கோவை கணபதிமாநகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முக பாண்டியன். இவரது மகள் கௌசல்யாவை பெரிய நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு 2024ம் ஆண்டு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார். சண்முக பாண்டியன் விக்னேஷுக்கு கவுண்டம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு பணி வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் விக்னேஷ் அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு வேறு எந்த பணிக்கும் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம் விக்னேஷின் விக்னேஷின் தந்தை முருகேசன், தாயார் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோர் மூவரும் காளப்பட்டி பகுதியில் உள்ள சண்முகபாண்டியனுக்கு சொந்தமான பங்களாவிற்கு குடிப்பெயர்ந்து வசித்து வந்துள்ளனர். சண்முகபாண்டியன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதால் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருந்துள்ளது. இதனால் சண்முகபாண்டியன்  விக்னேஷிடம் லாக்கர் மற்றும் பீரோ சாவியை கொடுத்து நகைகளை பார்த்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதில் சுமார் 1000 பவுன் நகை இருந்ததாக கூறப்படுகிறது.

கோவை
கோவை

இதனிடையே விக்னேஷ் மற்றும் கெளசல்யாவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், விக்னேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பங்களாவில் இருந்து வேறு இல்லத்திற்கு குடிப்பெயர்ந்து சென்றுள்ளனர். அதனை தொடர்ந்து சண்முகபாண்டியன் லாக்கர் மற்றும் பீரோ சாவியை விக்னேஷிடம் கேட்டபோது, அதனை தருவதற்கு மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து லாக்கரை உடைத்து பார்த்த போது அதில் இருந்த நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இந்த நகைகளை கேட்டபோது 100 பவுன் நகைகளை மட்டுமே கொடுத்த நிலையில், 900 பவுன் நகைகளை திருப்பி கொடுக்காமல்  கொலை மிரட்டல் விடுத்ததாக சண்முகபாண்டியன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலிசில் புகார் அளித்தார். இதன்பேரில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர். மேலும் விக்னேஷின் தாயார் வாசுகி, சகோதரி ஜீவிதா ஆகியோரை தேடி வருகின்றனர்.

கேரளம்: ஒரு வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்ற தாய்; திருமண நாளில் இளம்பெண் செய்த கொடூரம்

கேரள மாநிலம் ​திருவனந்தபுரம் மாவட்டம் விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித். மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கிறிஸ்டி (29). இவர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு... மேலும் பார்க்க

காட்பாடி: தேவாலய கட்டுமானப் பணி விபத்தில் 3 பேர் பலி; ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆந்திர மாநில எல்லையில் மந்தி கிருஷ்ணாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், புதிதாக சி.எஸ்.ஐ தேவாலயம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நேற்று மாலை கான்க... மேலும் பார்க்க

ஈரோடு: 3.50 ஏக்கர் நிலத்தை ரிஜிஸ்டர் செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம்; சப்-ரிஜிஸ்டர், பத்திர எழுத்தர் கைது

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ராயர் பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயி கார்த்திக். இவருக்குச் சொந்தமான மூன்றரை ஏக்கர் நிலத்தைப் பதிவு செய்வதற்காக கவுந்தப்பாடி சப்-ரிஜிஸ்டர் சங்கரை அணுகியுள்ளார். 3.50 ஏக்கர்... மேலும் பார்க்க

சென்னை: 'ஆபாச செய்கை, போட்டோ மார்பிங்' - GST பெண் ஆபீஸருக்கு செக்ஸ் டார்ச்சர்; சக அதிகாரி கைது

சென்னை முகப்பேரில் ஜி.எஸ்.டி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகாரியாக ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவருடன் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சவுரவ் என்பவரும் அத... மேலும் பார்க்க

பிரதீப் ராஜ் கொலை: 'கந்துவட்டி பிரச்னை; விநாயகர் சிலை' - சென்னை துணை நடிகர் கொலையின் பின்னணி என்ன?

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாடவீதியைச் சேர்ந்தவர் ராணி. இவரின் மகன் பிரதீப்ராஜ் (34). இவர் துணை நடிகராகவும் சென்னை துறைமுகத்தில் ஒப்பந்த அடிப்படையிலும் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் சில தினங்... மேலும் பார்க்க

சென்னை: பள்ளி மாணவிக்கு `ஐ லவ் யூ' சொன்ன ஆசிரியர் - போக்சோவில் கைதான பின்னணி!

சென்னை, அரும்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி, இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்தார். அவரின் இன்ஸ்டாவுக்கு தொடர்ந்து காதல் மெசேஜ்கள் வந்து கொண்ட... மேலும் பார்க்க