செய்திகள் :

கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கு: 2 பேர் கைது; ஒருவருக்கு கை, கால் முறிவு!

post image

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அச்சிறுமியை இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடத்தி சென்றதாக தெரியவந்தது. இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

இந்நிலையி்ல் நேற்று கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள குளக்கரையில் ஒரு சிறுமியின் சடலம் கிடப்பதாக சூலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு விசாரித்தனர். அதில் தேடப்பட்டு வந்த சிறுமி, சடலமாக கிடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

சூலூர் காவல் நிலையம்
சூலூர் காவல் நிலையம்

இதனிடையே சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், சிறுமியின் முகம் உள்ளிட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுமியின் உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு அவரது உறவினர்களும், பெற்றோரும் சூலூர் காவல் நிலைய வாயில் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு 9:30 மணி அளவில் துவங்கிய மறியல், அதிகாலை 5 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில்,  வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மேற்கு மண்டல காவல் துறை ஐ.ஜி. ரம்ய பாரதி, சூலூர் எம்.எல்.ஏ.சுகுமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இந்த நிலையில் சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்துக்குரிய கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கார்த்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும் கார்த்திக் மற்றும் அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட கார்த்தி காவல் துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு கட்டிடத்தில் இருந்து கீழே குதித்தாக கூறப்படுகிறது. இதில் வலது கை மற்றும் கால் முறிவு ஏற்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோகன்ராஜ்
மோகன்ராஜ்

மோகன்ராஜை ரிமாண்ட் செய்வதற்காக போலீசார் அவரது முகத்தை மூடியபடி சூலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். செய்தியாளர்களை பார்த்ததும் முகத்தை மறைத்திருந்த துண்டை விலகியபடி, “நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள்” என்றபடி சென்றார். பின்னர் நீதிபதி அருண்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, வருகின்ற 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்பு – பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? - போலீஸ் விசாரணை!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக ... மேலும் பார்க்க

காவல் நிலைய பெண் ஊழியருக்கு நேர்ந்த பாலியல் கொடுமை; விஷம் குடித்த குற்றவாளி - கிருஷ்ணகிரி பரபரப்பு!

காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் உதவியாளராக பணியாற்றும் பெண், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்து ... மேலும் பார்க்க

`30 சவரன் நகை... 12 வருஷமா போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைஞ்சிட்டே இருக்கேன்!' - முதுகுளத்தூர் இளையராஜா

முப்பது சவரன் நகையைப் பறிகொடுத்து 12 ஆண்டுகளாகியும் மீட்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கிறார், சென்னையில் வசிக்கும் முதுகுளத்தூரைச் சேர்ந்த இளையராஜா.'ஜெயலலிதா முதலமைச்சரா இருந்த 2014ம் வருஷம் நகை தொலைஞ... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள் கசிவில் கைதான ஆசிரியர்! - ரூ.1500 கோடி கோச்சிங் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?

மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் இந்த ஆண்டு தேர்வுக்கு முன்பே கசிந்தது. இதையடுத்து இந்த மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதோடு அடுத்த மாதம் மீ... மேலும் பார்க்க

டெல்லி: `உடலில் ரத்தத்தை தெளிப்பார்கள்'- பெண்ணை பாலியல் கொடுமை செய்து மதமாற்ற செய்ய முயன்ற கும்பல்

டெல்லியில் பாட்லா என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணிற்கு சமூக வலைதளம் மூலம் சாஹில் என்ற நபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த நபர், தான் ஒரு பணக்கார இந்து குடும்பத்தை சேர்ந்தவர் என்றும... மேலும் பார்க்க

ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்; ஒரே இரவில் கைதான 133 ரௌடிகள் - எஸ்கேப்பான ஏ பிளஸ்... தொடரும் நடவடிக்கை!

சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோதக் உத்தரவின் பேரில், 12 காவல் மாவட்ட போலீஸார், 4 மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் நேற்று ஒரே நாளில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் சரித்... மேலும் பார்க்க