செய்திகள் :

சங்கராபுரம் MLA அலுவலகத்தை திறந்து வைக்கும் சி.வி; இபிஎஸ் படம் இல்லாத அழைப்பிதழ் - தொடரும் சலசலப்பு!

post image

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையேயான கருத்து வேறுபாடுகள் குறித்து தொடர்ந்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வு மீண்டும் அந்த விவாதத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட சங்கராபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ராஜேஷின் புதிய அலுவலகம் நாளை காலை திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இதற்காக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழ்தான் தற்போது அதிமுக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

பொதுவாக அதிமுக சார்பில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறுவது வழக்கம். ஆனால், சங்கராபுரம் எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழாவுக்காக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இடம்பெறவில்லை. இதுவே அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீப காலமாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையை மறைமுகமாக விமர்சித்து வரும் சி.வி. சண்முகம், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்ற 47 தொகுதிகளில் 31 தொகுதிகள் வட மாவட்டங்களின் பங்களிப்பால் கிடைத்தவை என்றும், அதற்கு பாமக கூட்டணியின் வாக்கு வங்கி முக்கிய காரணம் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், இந்த வெற்றி முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் தலைமையால் கிடைத்ததல்ல என்ற வகையிலும் அவர் பேசியருந்தார்.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ள சங்கராபுரம் நிகழ்ச்சி அழைப்பிதழ், சி.வி. சண்முகத்தின் அரசியல் நிலைப்பாட்டை பிரதிபலிப்பதாக சிலர் கருதுகின்றனர். அதிமுகவில் உள்ள ஒரு பிரிவு நிர்வாகிகள் மற்றும் சில எம்.எல்.ஏக்கள், சி.வி. சண்முகத்தின் கருத்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஏற்கனவே பேசப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு அந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

கட்சிக்குள் உருவாகி வரும் இந்த மோதல் எதிர்காலத்தில் எந்த வடிவத்தை எடுக்கும் என்பதும், அதிமுக தலைமை இந்த விவகாரத்தை எவ்வாறு அணுகப் போகிறது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்ப... மேலும் பார்க்க

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார... மேலும் பார்க்க

'தண்ணீர் பாட்டிலா... டம்ளரா... எதை தூக்கி வீசலாம்?' - மாறி மாறி கலாய்த்த பிரேமலதா - ஓ.பி.எஸ்!

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.பிரேமலதா ... மேலும் பார்க்க

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க

`இணைந்தும், இணையாமலும்.!' - வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி - வெளியே எடப்பாடி!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விவ... மேலும் பார்க்க

`வசூல், பஞ்சாயத்துனு கும்பலா கிளம்பியிருக்காங்க, ஆனா எங்க ஆளுங்க இல்ல!' - சிங்காநல்லூர் தவெக MLA

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அமர்நாத். தாது மணலை பிரிக்கும் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், தன்னிடமிருந்து இருபது லட்ச ரூபாயை ஏமாற்றும் நோக்கில் செயல்படும் இரண்டு பேருக... மேலும் பார்க்க