செய்திகள் :

சட்டமன்றம்: அதிமுக வெளிநடப்பு; 'மீண்டும் நடுவர் மன்றம் ஏன்?' - தமிழக அரசுக்கு எடப்பாடி கேள்வி

post image

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த வெள்ளி கிழமையே மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த தீர்மானத்தில் தற்போது ' புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்' எனத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக நடப்பு
அதிமுக நடப்பு

மேகதாது அணை தீர்மானத்தில் முதல்வர் விஜய் திருத்தத்தை சேர்த்தது அவை மீறிய செயலாகும் என்று எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "சட்டமன்ற விதிகளின்படி ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றால், அதற்கென அரசு தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும்.

விதமுறைகளின்படி அவர்கள் சட்டமன்றத்தில் இந்தத் திருத்தத் தீர்மானத்தைக் கொண்டு வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்சினை எழுப்பினோம்.

ஆனால், அதற்குச் சட்டப்பேரவைத் தலைவர் அனுமதி மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே அவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

இது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வு சார்ந்த விஷயம். காவிரி நதி என்பது தமிழகத்தின் ஜீவாதார நதி. தமிழகத்தின் ஜீவநதி.

இதை நம்பித்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் இருக்கிறார்கள். காவிரி நதிநீரை நம்பித்தான் தமிழகத்தில் 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் உள்ளது.

அதிமுக நடப்பு
அதிமுக நடப்பு

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் இதுகுறித்து ஒரு நிலையான இறுதித் தீர்ப்பை வழங்கிவிட்டன. அப்படித் தெளிவான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் இந்த வேளையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என்று இந்த அரசு கேட்பது எந்த நோக்கத்திற்காக?

உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 15 ஆண்டுகாலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அதில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், மேல்படுகை மாநிலமான கர்நாடகா காவிரி நீரைத் தடுக்கவோ, தேக்கவோ அல்லது திருப்பி அனுப்பவோ கூடாது என்று தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்கும்போது, மீண்டும் இந்த இடைச்செருகல் திருத்தத் தீர்மானத்தை இந்த அரசு ஏன் கொண்டு வந்தது என்ற விளக்கத்தைப் பெறுவதற்காகத்தான் நாங்கள் உரிமைப் பிரச்னையைக் கொண்டு வந்தோம்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.

"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநிதி ஸ்டாலின் உரை

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந... மேலும் பார்க்க

ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, இன்னொரு பக்கம் மிரட்டல் - அமெரிக்காவின் முரண்; வெளியேறிய ஈரான்!

ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த புதன்கிழமை (ஜூன் 17, 2026) கையெழுத்திடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஸ்விட்சர்லாந்தில் அமெரிக்கா, ஈரான் இடையே நேற்று (ஜூன் 21, 2026) பேச்சுவார... மேலும் பார்க்க

'தண்ணீர் பாட்டிலா... டம்ளரா... எதை தூக்கி வீசலாம்?' - மாறி மாறி கலாய்த்த பிரேமலதா - ஓ.பி.எஸ்!

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.பிரேமலதா ... மேலும் பார்க்க

பிரேமலதா வைத்த கோரிக்கை; ஓபிஎஸ் சொன்ன பதில்; சட்டமன்றத்தில் கலகல; என்ன நடந்தது?

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், "முதல்வர் விஜய்க்கு உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள். சட்டமன்றத்தில்... மேலும் பார்க்க

`இணைந்தும், இணையாமலும்.!' - வெளிநடப்பு செய்த அதிமுகவினர்; உள்ளே வேலுமணி - வெளியே எடப்பாடி!

இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, இன்று (ஜூன்.22) தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியிருக்கிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தற்போது சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விவ... மேலும் பார்க்க

`வசூல், பஞ்சாயத்துனு கும்பலா கிளம்பியிருக்காங்க, ஆனா எங்க ஆளுங்க இல்ல!' - சிங்காநல்லூர் தவெக MLA

நாகர்கோவிலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அமர்நாத். தாது மணலை பிரிக்கும் இயந்திரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவர், தன்னிடமிருந்து இருபது லட்ச ரூபாயை ஏமாற்றும் நோக்கில் செயல்படும் இரண்டு பேருக... மேலும் பார்க்க