"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநி...
'தண்ணீர் பாட்டிலா... டம்ளரா... எதை தூக்கி வீசலாம்?' - மாறி மாறி கலாய்த்த பிரேமலதா - ஓ.பி.எஸ்!
ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.

ஆளுநர் உரையின் மீது பேச எழுந்த பிரேமலதா முதலில், 'உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்' என்றார். தொடர்ந்து பேசியவர், 'அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் வைப்பதால் மீண்டும் மீண்டும் தண்ணீரை நிரப்ப அவை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். நமக்கே சங்கடமாக இருக்கிறது. அதனால் அவை உறுப்பினர்களுக்கு இடத்தில் தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்'
உடனடியாக எழுந்த திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ், 'கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை தூக்கி அடித்து விடுவார்கள்' என்றார். அவையில் சிரிப்பலை எழவே, 'வன்முறையாக தூக்கி அடிப்பதாக இருந்தால் டம்ளரை கூட தூக்கி அடிக்கலாம் (நகைச்சுவையாக...)' என பிரேமலதா கூறினார். குறுக்கிட்ட பேரவை உறுப்பினர் தங்கம் தென்னரசு, 'இது ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த வாழ்க்கை அனுபவமா என்று அறிய விரும்புகிறேன்' என்று கமென்ட் அடித்தார்.

இந்த உரையாடல் முதல்வர் உட்பட அவையில் உள்ள அத்தனை உறுப்பினர்களையும் கலகலப்பூட்டியது.

















