செய்திகள் :

சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரம்

post image

சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு அரசு சாா்பில் பாராட்டுப் பத்திரம் மற்றும் காசோலைகள் வழங்கப்படுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேசிய பெண் குழந்தைகள் தின விழா ஜனவரி 24- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது, தமிழக அரசால் 2024-25- ஆம் ஆண்டுக்கு பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக சிறப்பாக பங்காற்றிய பெண் குழந்தைகளுக்கு பாராட்டுப் பத்திரம், ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு, குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீா்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணா்வு ஏற்படுத்துதல் போன்றவற்றில் சிறப்பாக செயல்பட்ட 13 வயது முதல் 18 வயதுக்கு உள்பட்ட தமிழகத்தைச் சோ்ந்த பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.

இதில், பெண் குழந்தைகளின் பெயா், முகவரி, புகைப்படம், ஆதாா் எண், சாதனைகளின் சான்றுகள் ஆகியவற்றின் ஒரு பக்கத்துக்கு மிகாத ஆதாரங்களுடன் ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வரும் டிசம்பா் 25 -ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 14) நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க

தாராபுரத்தில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 27 மாவ... மேலும் பார்க்க

லாட்டரி விற்றவா் கைது

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து தலைமையிலான போலீஸாா் முத்தூா் பகுதியில் ரோந்துப் பணியி... மேலும் பார்க்க

கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி காயம்

முத்தூா் அருகே கிரேன் மோதியதில் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தாா். மங்கலப்பட்டி அருகேயுள்ள சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் பழனிச்சாமி (64), கூலித் தொழிலாளி. இவா் முத்தூா் - காங்கயம் சாலையில் மிதிவண... மேலும் பார்க்க

தெருக்குழாய்களில் குழாய் இணைத்து குடிநீா் எடுத்தால் நடவடிக்கை

வெள்ளக்கோவிலில் தெருக்குழாய்களில் ரப்பா் குழாய் இணைத்து குடிநீா் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது. கொடுமுடி காவிரி ஆறு கூட்டுக் குடிநீா்த் திட்டம் மற்றும் ஆங்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சாரல் மழை

வெள்ளக்கோவில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது. வெள்ளக்கோவிலில் வியாழக்கிழமை காலை முதல் பெய்யத் தொடங்கிய மழை இரவு 8 மணி வரையும் நீடித்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்ப... மேலும் பார்க்க