செய்திகள் :

சாதாரணமாக தொடங்கிய ஒரு நாள் வேலை… முடிவில் கிடைத்தது ₹98 கோடி புதையல் - நடந்தது என்ன?

post image

பெல்ஜியத்தில் பழைய கட்டடம் ஒன்றின் அருகே கழிவுநீர் குழாய் அமைக்கும் பணிக்காக நிலத்தைத் தோண்டிக் கொண்டிருந்த 18 வயது இளைஞருக்கு, சுமார் ₹98 கோடி மதிப்பிலான தங்கப் புதையல் கிடைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sint-Gillis-Dendermonde பகுதியில் இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மண்ணுக்குள் சில நாணயங்கள் போன்ற பொருட்கள் இருப்பதை 18 வயதான Kobe கவனித்துள்ளார். முதலில் அவை சாதாரண ஒரு யூரோ நாணயங்கள் என்றுதான் நினைத்துள்ளார். ஆனால் தொடர்ந்து பார்த்தபோதுதான், அவை தங்க நாணயங்கள் என்பது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அங்கு ஏராளமான தங்கப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 49 தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் மற்றும் தங்கத் துண்டுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் 9 மில்லியன் யூரோ, அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ₹98 கோடி எனக் கூறப்படுகிறது.

இந்தத் தங்கம் சாதாரணமாக மண்ணுக்குள் கிடக்கவில்லை. பழைய கட்டிடத்தின் பாதாள அறைப் பகுதியிலுள்ள சுவருக்குள் செங்கற்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதையல் கிடைத்ததும் தொழிலாளர்கள் உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது தங்கம் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதை யார் மறைத்து வைத்தது, எப்போது மறைக்கப்பட்டது, உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கியவருக்கு சிறந்த பணிக்கான விருது; ராமநாதபுரம் நகராட்சி சர்ச்சை!

நாட்டின் 80 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது அரசு பணிகளிலும், பொது சேவைகளிலும் சிறந்த பணியாற்றியவர்களுக்கு சிறந்த பணிக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்குவத... மேலும் பார்க்க

தி.,காங்கிரஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்ட முன்னாள் துணை சபாநாயகர் - மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக இருந்தபோது துணை சபாநாயகராக பணியாற்றியவர் ஆசிஷ் பானர்ஜி. ராம்பூர்ஹாட்டில் இருந்து ஐந்து முறை எம்எல்ஏ-வாக இருந்தவர். கடந்த முறை நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வ... மேலும் பார்க்க

பட்டம் விடும் திருவிழா: ECR வானில் பிரமாண்ட வர்ணஜாலம் நிகழ்த்தும் ஆயிரக்கணக்கான பட்டங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறை வளாகத்தில் பல்வேறு நாட்டு காத்தாடிகளும், நம் இந்திய நாட்டு காத்தாடிகளும், தமிழக கலாசாரத்தை சிறப்பிக்கும் காத்தாடிகளு... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பான் மசாலாவிற்கு விளம்பரம்: நடிகர் ஷாருக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

மகாராஷ்டிராவில் பான் மசாலாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் நடிகர் ஷாருக் கான் ஆகியோர் விமல் எலைச்சி எனப்படும் ஒருவகை பான் மசாலாவிற்கு தொடர்ந்து விளம்பரம் செய்... மேலும் பார்க்க

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் விபரீதம்: செல்ஃபி எடுப்பதாகக் கூறி, மகளை ஆற்றில் வீசிய தந்தை!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ரிங்கு. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். கணவன் மனைவி ஆகிய இரண்டு பேரும் தங்களது மகளுடன் ஆக்ராவை சுற்றிப்... மேலும் பார்க்க