தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலம் முடிவு! - நள்ளிரவு முதல் கடலுக்குச் செல்லும் ...
`சிங்கிள் பெட்ரூம் வீடு; அதுவும் சொந்தமில்லை' - டிரில்லியனரான எலான் மஸ்க்கின் சுவாரஸ்யப் பக்கம்!
விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' (SpaceX) நிறுவனத்தின் பிரமாண்ட பங்குச் சந்தை அறிமுகத்தைத் (IPO) தொடர்ந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல் 'டிரில்லியன் அதிபர்' (Trillionaire) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இருப்பினும், இவ்வளவு பிரமாண்ட சொத்துக்கு அதிபதியான பிறகும், அவர் டெக்சாஸில் உள்ள ஒரு எளிய 400 சதுர அடி சிறிய வீட்டிலேயே வசித்து வருகிறார்.
'பார்ச்சூன்' (Fortune) மற்றும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' ஆகிய சர்வதேச ஊடகங்களின் அறிக்கைகளின்படி, கடந்த ஜூன் 12, 2026 அன்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பொதுச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.
வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே அதன் பங்குகள் அசுர வேகத்தில் உயர்ந்ததால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 1.77 டிரில்லியன் டாலராக எகிறியது.

இதன் மூலம், அந்நிறுவனத்தில் பெரும் பங்குகளைக் கொண்டுள்ள எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு உயர்ந்து, அவர் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுத்துள்ளார்.
ஆனாலும், மஸ்க்கின் வாழ்க்கை முறை வியக்கத்தக்க வகையில் மிகவும் எளிமையாகவே உள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போகா சிகா (Boca Chica) பகுதியில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார்பேஸ்' ஏவுதளத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
'பாக்ஸபிள்' (Boxabl) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் தயாரித்த இந்தச் சிறிய வீட்டை, அவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திடமிருந்து வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளார். இதில் ஒரு சிறிய வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை மற்றும் ஒரு குளியலறை மட்டுமே உள்ளன.
சொகுசு வாழ்க்கையை விட தனது வேலைக்கே முக்கியத்துவம் கொடுக்கும் மஸ்க், கடந்த 2020-ம் ஆண்டிலேயே "எனக்கு என்று சொந்தமாக வீடு எதுவும் இருக்காது" எனப் பகிரங்கமாக அறிவித்து, கலிபோர்னியாவில் இருந்த தனது பங்களாக்கள் அனைத்தையும் விற்றுவிட்டார்.
ஆஸ்டின் நகருக்கு அருகே அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் சில பெரிய வீடுகளைக் கொண்டிருந்தாலும், எலான் மஸ்க் தனது பெரும்பாலான நேரத்தை இந்த 400 சதுர அடி வீட்டிலேயே கழிக்கிறார். இந்த எளிய வீட்டை அவர் மிகவும் அற்புதமான இடம் என்று பலமுறை வர்ணித்துள்ளார்.
மஸ்க்கின் இந்த எளிய வாழ்க்கை முறை குறித்து அவரது தாயார் மே மஸ்க் (Maye Musk) சுவாரசியமாகப் பகிர்ந்துள்ளார். ஒருமுறை அந்த வீட்டிற்குச் சென்றபோது, அங்குள்ள பிரிட்ஜில் உணவுகள் எதுவும் இல்லை.
கேரேஜை மாற்றியமைத்து உருவாக்கப்பட்ட படுக்கையறையில்தான் நான் தூங்கினேன். அங்கு தங்கியிருந்தபோது ஒரே ஒரு துண்டையே (Towel) பகிர்ந்து பயன்படுத்தினோம் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பொருள்களைச் சேர்ப்பது கவனச்சிதறலை ஏற்படுத்தும் என்று நம்பும் எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடந்த காலங்களில் தொழிற்சாலைகளிலேயே படுத்துத் தூங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் பெரும் பணக்காரர்கள் ஆடம்பர பங்களாக்களில் வாழும் சூழலில், உலகின் முதல் டிரில்லியனரான பிறகும் எலான் மஸ்க் தேர்ந்தெடுத்துள்ள இந்த எளிய வாழ்க்கை முறை உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.










