செய்திகள் :

சிட்டகாங் டெஸ்ட்: மூவர் சதம், முதல் இன்னிங்ஸில் தெ.ஆ. 577க்கு டிக்ளேர்!

post image

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க அணி 577க்கு டிக்ளேர் செய்தது.

தென்னாப்பிரிக்க அணி வங்தேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட்டில் சிட்டகாங் மைதானத்தில் முதல் பேட்டிங் செய்த தெ.ஆ. முதல்நாள் முடிவில் 2விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்திருந்தது.

இதையும் படிக்க:பெனால்டி கோலை தவறவிட்ட ரொனால்டோ..! சௌதி கோப்பையிலிருந்து வெளியேறியது அல்-நசீர்!

அதில் ஸ்டப்ஸ், டோனி டி ஜோர்ஸி தங்களது முதல் டெஸ்ட் சதமடித்து அசத்தினார்கள்.

இரண்டாம் நாளில் முல்டர் 105 ரன்களும் சேனுரன் முத்துசாமி 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். பின்னர், 577/6 ரன்களுக்கு டிக்ளேர் செய்தார்கள்.

வங்கதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இதையும் படிக்க: விராட் கோலிக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை..! முன்னாள் ஆஸி. வீரர் கருத்து!

தற்போது வங்கதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 5 ஓவர்களுக்கு 25/2 ரன்கள் எடுத்துள்ளது. ககிசோ ரபாடா 2 விக்கெட்டினை எடுத்து அசத்தினார்.

கடைசி டெஸ்ட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 86/4

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 86/4 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நிய... மேலும் பார்க்க

ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அசத்தல்! நியூசிலாந்து 235-க்கு ஆல் அவுட்!

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியாவுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற க... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் ரிஷப் பந்த்! ரெய்னா சூசகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்திய வீரர் ரிஷப் பந்த் இடம்பெறுவது குறித்து சுரேஷ் ரெய்னா தகவல் அளித்துள்ளார்.ஐபிஎல் 2025 தொடருக்கு மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் அணிகள் தாங்கள... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-ல் தோனி: அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்! முழுப் பட்டியல்

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அணிகளால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் அதிக வரவேற்பு பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் வரும் 2025 சீசனுக்கு மெகா ஏ... மேலும் பார்க்க

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரபாடா..! பும்ரா பின்னடைவு!

வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடியதால் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ராபாடா 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி... மேலும் பார்க்க

விராட் கோலிக்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியவில்லை..! முன்னாள் ஆஸி. வீரர் கருத்து!

2024ஆம் ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 245 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 10 இன்னிங்ஸ், 5 போட்டிகளில் சராசரியாக 27.22 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்... மேலும் பார்க்க