செய்திகள் :

சிறப்புத் தீவிர திருத்தம்: ”ஜனநாயகத்தைக் கொலை செய்யும் முயற்சி” - கனிமொழி கண்டனம்

post image

தூத்துக்குடி, முத்தம்மாள் காலனியில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் வித்யா பிரகாசம் சிறப்புப் பள்ளியில், மாவட்ட கனிமவள நிதியின் மூலம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மக்களவைத்தொகுதி உறுப்பினரும் திமுகவின் துணை பொதுச்செயலாளர்களில் ஒருவருமான கனிமொழி கலந்து கொண்டு, வகுப்பறைகள் மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “SIR-யைத் தேர்தலுக்கு முன்பே கொண்டு வந்து, இப்படி அவசர அவசரமாக அமல்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. 

நிகழ்ச்சியில் கனிமொழி
நிகழ்ச்சியில் கனிமொழி

உண்மையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என நினைத்திருந்தால், போதிய அவகாசம் கொடுத்து SIR-யைச் சரியாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால் பீஹாரில் நாம் தெளிவாகக் பார்த்தோம்.

பலரின் வாக்குரிமை பறிக்கப்பட்டன. இதேபோன்ற நிலை மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் நடந்துள்ளன.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பில், மக்களின் வாக்குரிமை எந்த அளவிற்குப் பறிக்கப்பட்டுள்ளது என்பதை மிகத் தெளிவாகச் சொல்லி இருக்கிறார்.

ஜனநாயகத்தைக் கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சிதான், இந்த SIR. அதுமட்டுமில்லாமல், தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பல பிரச்னைகளை உருவாக்கி, வாக்காளர்களின் உரிமைகளைப் பறிக்கக்கூடிய ஒரு சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் எதிர்த்துதான் தி.மு.கழகமும், கூட்டணிக் கட்சிகளும் இணைந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இருக்கிறோம்.

திறப்பு விழாவில் கனிமொழி
திறப்பு விழாவில் கனிமொழி

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அவர்களுக்கு எதிரான குற்றங்கள் எதுவாக இருந்தாலும், அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று.

குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாம் கண்டிப்பாகக் கண்டிக்க வேண்டும். இந்தச் சமூகம் முதலில் சில விஷயங்களில் பெண்மீது பழி சுமத்தும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கையை முதல்வர் எடுத்திருக்கிறார்.

அவர்களுக்கு மிக விரைவில், அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று முழு முயற்சியுடன் முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கண்டனம் தெரிவிக்க முடியும். ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கு என்ன கண்டனம் தெரிவிக்க முடியும்?” என்றவரிடம்,

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க வெற்றி பெறாவிட்டால் நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என முதல்வர் ஒன் டூ ஒன் நிகழ்வில் கூறியுள்ளதாகப் பரவும் தகவல் பற்றி கேட்டபோது, “‘உடன்பிறப்பே வா’ சந்திப்பின் போது நானும் உடன் இருந்தேன்.

நிகழ்வில் கனிமொழி
நிகழ்வில் கனிமொழி

வெற்றி பெறவில்லை என்றால் யாருடைய பதவியும் பறிக்கப்படும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. வெற்றி பெற வேண்டும் என்ற அறிவுரையை ஒரு கட்சித் தலைவர் வழங்குவது என்பது நிச்சயமாகத் தேவையான ஒன்று.

வெற்றி பெற வேண்டும், அதற்காக அனைவரும் ஒருமித்து பாடுபட வேண்டும் என்று முதல்வர் அனைவரிடமும் சொல்லி உள்ளார்”  என்று பதிலளித்தார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: "SIR-ஐ எதிர்த்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்" - ஸ்டாலின்

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் கூட்டம் ஒன்றை நடத்தினார்.அந்தக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் பதிவிட்டிருப்ப... மேலும் பார்க்க

'இனப்படுகொலை' - நெதன்யாகு மீது கைது வாரன்ட் பிறப்பித்த துருக்கி

'போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இனி பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது. இனி பாலஸ்தீன மக்கள் நிம்மதியாக வாழலாம்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து இன்னும் ஒரு மாதம்கூட மு... மேலும் பார்க்க

அதிமுக: "உழைப்பவர்களை எவராலும் வீழ்த்த இயலாது" - என்ன சொல்கிறார் செங்கோட்டையன்?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று (நவ. 9) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அப்போது, "எனக்கு சங்கங்களிலிருந்து நி... மேலும் பார்க்க