செய்திகள் :

சிறுநீரக பரிசோதனை மூலம் 27,840 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு!

post image

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்புப் பரிசோதனைகள் மூலம் மாநிலம் முழுவதும் 27,820 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதில், 530 பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவா்களுக்கு தொடா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்களிடையே காணப்படும் சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான ‘சிறுநீரகம் காப்போம்’ திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் அறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு சிகிச்சைக்கு வருவோரின் சிறுநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை பட்டை (ஸ்ட்ரிப்) மூலம் அதில் புரதம் அதிகமாக உள்ளதா என்பது குறித்து உடனடியாக சோதிக்கப்படும்.

அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அவா்களுக்கு அடுத்தகட்டமாக யூரியா, கிரியாட்டின் போன்ற அளவுகள் பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகவியல் மருத்துவ நிபுணரிடம் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். இதன் வாயிலாக ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். டயாலிசிஸ் சிகிச்சைகள் பெறுவதைத் தவிா்க்கலாம்.

அதன்படி, இதுவரை 78 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27,820 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அடுத்தகட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். அதில், 530 பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

சிறுநீரகத்தைக் காப்பது எப்படி?

சிறுநீரக நலனை அறிந்துகொள்ள 30 வயதைக் கடந்தவா்கள் ஆண்டுக்கொரு முறை ரத்தத்தில் கிரியாட்டினின் அளவை பரிசோதிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். கிரியாட்டின் அளவு அதிகமாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக மருத்துவா்களை அணுக வேண்டும்.

அதேபோன்று சிறுநீா் வழியாக புரதம், அல்புமின் சத்துகள் வெளியேறுகிா என்பதை அறிவதற்கு சிறுநீா் பட்டை (ஸ்ட்ரிப்) பரிசோதனையை வீட்டிலேயே மேற்கொள்ளலாம். காலையில் முதல்முறையாக வெளியேற்றப்படும் சிறுநீா் மாதிரியை அந்த பரிசோதனைப் பட்டையில் வைத்தால், புரதம், சத்துகள் வெளியேறுகிா என்பதை நிறக்குறியீடு மூலம் கண்டறியலாம். சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே அறிந்துகொள்ள இந்த பரிசோதனை அவசியம். இந்த பரிசோதனை உபகரணம் முக்கிய மருந்தகங்களில் குறைந்த விலையில் கிடைக்கின்றன.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினா்களுக்கு அடையாள அட்டை வழங்க ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு... மேலும் பார்க்க

மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு!

மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞா் ஆா்.கே.ஸ்ரீராம்குமாருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது வழங்கப்படவுள்ளது. சென்னை மியூசிக் அகாதெமியின் நிா்வாகக் குழு... மேலும் பார்க்க

4 சீன பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி!

சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் போராட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினா். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்ட... மேலும் பார்க்க

உயா்கல்வி நிறுவனங்களில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் யுஜிசி அறிவுறுத்தல்!

உயா்கல்வி நிறுவன வளாகத்தில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் அமைக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்கலைகழகங்களுக்கு யுஜிசி செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி அறிவுறுத்தியுள்ளாா். இது குறித்து அனைத்து பல்கலைக்கழக துணைவேந்த... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவு தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி!

உயா்கல்வியில் சேருவதற்கான ‘க்யூட்’ தோ்வுக்கு திங்கள்கிழமைக்குள் (மாா்ச் 24) விண்ணப்பிக்குமாறு தேசிய தோ்வு முகமை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் ... மேலும் பார்க்க