செய்திகள் :

சிறையில் கவுன்சிலராகப் பதவியேற்ற பா.ஜ.க பிரமுகர்; கேரள அரசியல் வரலாற்றில் முதன் முறை நிகழ்வு!

post image

கேரள மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க வசம் உள்ளது. மாநகராட்சி மேயராக பா.ஜ.க-வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் பதவியில் உள்ளார். முன்னதாக, திருவனந்தபுரம் மாநகராட்சி பா.ஜ.க கவுன்சிலர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பலரும், முறைப்படி 'கடவுளின் பெயரால்' என்று உறுதிமொழி ஏற்பதற்குப் பதிலாக, தங்களுக்குப் பிடித்த கடவுள்களின் பெயர்களை நேரடியாகக் கூறியும், தியாகிகளின் பெயர்களைக் கூறியும் பதவியேற்றனர். இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், விதிகளை மீறி பதவியேற்ற பா.ஜ.க-வைச் சேர்ந்த 20 கவுன்சிலர்களின் பதவியேற்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

​நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பா.ஜ.க கவுன்சிலர்கள் 19 பேர் மாநகராட்சி அலுவலகத்தில் முறைப்படி மீண்டும் பதவியேற்றுக் கொண்டனர். ஆனால், திருவனந்தபுரம் மாநகராட்சியின் வாழோட்டுகோணம் வார்டு பா.ஜ.க கவுன்சிலரான ஆர்.சுகதன் மட்டும் அதில் கலந்துகொண்டு பதவியேற்க முடியவில்லை. சுகதன் பல்வேறு குற்ற வழக்குகள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, கேரள சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டமான 'காப்பா' விதியின் கீழ் கைது செய்யப்பட்டு, திருச்சூர் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்ததே இதற்கு முக்கியக் காரணமாகும்.

​மாநகராட்சிக்கு நேரில் வந்து பதவியேற்க முடியாத சூழ்நிலை நிலவியதால், சிறையில் இருந்தபடியே தான் பதவியேற்க அனுமதிக்க வேண்டும் அல்லது இதற்காகத் தற்காலிகமாகத் தன்னை பரோலில் விட வேண்டும் என்று கோரி சுகதன் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கேரள வரலாற்றிலேயே முதன் முறையாக, குற்ற வழக்கில் கைதியாகச் சிறையில் இருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதி, சிறை வளாகத்திற்குள்ளேயே கவுன்சிலராகப் பதவியேற்றுக் கொண்ட அரிய மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு திருச்சூர் விய்யூர் மத்திய சிறையில் நடந்துள்ளது.

விய்யூர் சிறையில் நடந்த பதவியேற்பு விழா

இந்த மனுவை விசாரித்த நீதியரசர் பி.வி.குஞ்ஞிகிருஷ்ணன், மக்களின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றும், ஜனநாயக நடைமுறைகள் எக்காரணம் கொண்டும் தடுத்து நிறுத்தப்படக் கூடாது என்றும் கூறியதுடன், கடுமையான 'காப்பா' சட்டம் சுமத்தப்பட்டுள்ளதால் மனுதாரரை இப்போது வெளியில் நடமாட விட முடியாது என்றும், அதே சமயம் மக்களின் தீர்ப்பு பாழாகாமல் இருக்க அசாத்தியமான சூழ்நிலைகளில் அசாத்தியமான முடிவுகள் தேவைப்படுகின்றன என்றும் கூறி, சுகதனை சிறையிலேயே பதவியேற்க வைக்க நீதிமன்றம் அதிரடி அனுமதி அளித்தது.

சிறையில் பதவியேற்ற பா.ஜ.க கவுன்சிலர் ஆர்.சுகதன்

நீதிமன்ற உத்தரவின்படி, திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் வி.வி.ராஜேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று திருச்சூரில் உள்ள விய்யூர் மத்திய சிறைக்குச் சென்றனர். அங்கு சிறை வளாகத்தில் உள்ள நூலக அரங்கில் இதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில், ஆர். சுகதன் கடவுளின் பெயரால் உறுதிமொழி கூறி கவுன்சிலராகப் பதவியேற்றுக் கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதி, சிறைக் கைதியாக இருந்துகொண்டு சிறை வளாகத்திற்குள் பதவியேற்பது கேரள அரசியல் மற்றும் சட்ட வரலாற்றில் இதுவே முதன் முறையாகும்.

லாக்கப் மரணம்: 'அடித்தே கொன்ற காவல்துறையினரைப் முதல்வர் விஜய் பாதுகாக்கிறாரா?'- சீமான் கண்டனம்

நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைதுசெய்து சிறையிலடைக்கப்பட்ட சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காவல் மரணம... மேலும் பார்க்க

கிண்டி: ரயில்வே நிலைய மேம்பாலம் அருகே நிலவும் சுகாதார சீர்கேடு; முகம் சுளிக்கும் மக்கள்!

சென்னையின் மையத்தில் உள்ள மிக முக்கியமான கிண்டி ரயில் நிலையத்தில், ரேஸ் கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேடை உள்ளது.அதில் ரேஸ் கோர்ஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த... மேலும் பார்க்க

"எனது சொந்தக்காரர் 100 கோடிக்கு நிலம் வாங்கினாரா?" - பத்திரப்பதிவு சர்ச்சைக்கு அமைச்சர் விளக்கம்!

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6-ஆம் தேதி தனிநபர்கள் இருவரின் பெயர்களில் வெறும் ரூ. 2 கோடிக்கு முறைகேடாகப் பத்திரப்பதி... மேலும் பார்க்க

காவல் மரணம்: சாமானியருக்கு ஒரு சட்டம், த.வெ.க நிர்வாகிக்கு ஒரு சட்டமா? - உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருளான குட்கா விற்பனை செய்ததாகக் கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டபோது நல... மேலும் பார்க்க

E20 : `நீங்களோ நானோ, காரின் மைலேஜை சரியாக கணக்கிட முடியாது!' - அமைச்சர் நிதின் கட்கரி புது விளக்கம்

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களின் மைலேஜ் குறைவதாகப் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு காரின் எரிபொருள் சிக்கனத்தை அதன் உரிமையாளர் தாமாகவே துல்லியமாகக் கணக்கிட முடியாது என்றும், அ... மேலும் பார்க்க