செய்திகள் :

சிவகாசி: தனியார் கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்; முதல்வர் – உதவியாளர் கைது! - நடந்தது என்ன?

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தனியார் தன்னாட்சி கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பி.சி.ஏ 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவர் ஒருவரை காதலித்து வந்ததாகவும்... அவருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்று  கல்லூரி மாணவ மாணவியர் மத்தியில் பரவியதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட முதல்வர் அசோக்- உதவியாளர் மணிமாறன்

இதனையடுத்து, கல்லூரி முதல்வர் அசோக், அம்மாணவி மற்றும் அவரின் தாயாரை அழைத்து  எச்சரித்ததுடன், மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிவிட்டு எச்சரிக்கை செய்ததுடன், படிப்பை தொடருமாறு அறிவுறுத்தினாராம். இந்த நிலையில், மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் மிரட்டியதால்தான் அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் எனக்கூறி, எஸ்.எப்.ஐ மாணவர் சங்கத்தினர், அவரின் இறப்பிற்கு நீதி கேட்டும், உரிய இழப்பீடு கேட்டும் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது.  

அதே நேரத்தில், தற்போது வைரலான புகைப்படம், ஓர் ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்டது எனவும், அந்த படம் தற்போது எப்படி வைரல் ஆனது எனவும் சக மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கல்லூரி முதல்வர் அசோக்கின், உதவியாளர் மணிமாறன்தான் அந்த புகைப்படத்தை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதாகவும், அந்த மாணவியை பழி வாங்கும் விதமாகச் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்லூரி முதல்வர் அசோக் மற்றும் உதவியாளர் மணிமாறன் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாணவியின் தாயார் மற்றும் மாணவர்கள் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், உயர் கல்வித்துறையின் மதுரை மண்டல இயக்குநர் கலைச்செல்வி கல்லூரியில் விசாரணை நடத்தியதையடுத்து முதல்வரின் உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.  

மாணவர்களின் போராட்டம்

சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸாரின் விசாரணைக்குப் பிறகு முதல்வர் அசோக் மற்றும் மணிமாறன் ஆகியோர் மீது 108 பி.என்.எஸ் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதல்வரைக் கைதுசெய்தனர். சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் சுனில்ராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் முதல்வர் அசோக் ஜாமீனில் வெளியே வந்தார். தலைமறைவாக இருந்த முதல்வரின் உதவியாளர் மணிமாறனை போலீஸார் தேடி வந்த நிலையில், தற்போது அவரும் கைது செய்யப்பட்டார்.  

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க