செய்திகள் :

சிவகாசி: பெண்ணிடம் நகை, பணம் மோசடி; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு சிறை!

post image

விருதுநகர் மாவட்டம், சிவகாசி போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி மீனாட்சி. பழனியப்பன் உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி மீனாட்சிக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மீனாட்சி அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

சிவகாசி

இந்த நிலையில், அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த கார்த்தீஸ்வரி என்பவர், மீனாட்சியிடம் நகை மற்றும் பணம் வாங்கியுள்ளார். இதன் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 87 ஆயிரம் எனக் கூறப்படுகிறது. இந்த பணத்தை தெரிந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து அதில் கிடைக்கும் வட்டித்தொகையை மீனாட்சியிடம் தந்துவிடுவதாக கார்த்தீஸ்வரி கூறியுள்ளார். ஆனால், வட்டிப்பணம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடிக்கு அவரது கணவர் கோவிந்தராஜ் மகன்கள் கணேஷ் பாண்டி, சக்தி பாண்டி ஆகியோரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அவர்களிடம் பலமுறை பணம் கேட்டும் உரிய பதில் அளிக்காத நிலையில், சிவகாசி டவுண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சிவகாசி நீதிமன்றம்

இந்த வழக்கு சிவகாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சுனில்ராஜா மீனாட்சியிடம் பணம், நகைகளை பெற்று மோசடி செய்ததாக கார்த்தீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரது கணவர் கோவிந்தராஜ் மற்றும் இரு மகன்கள் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.  

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க