செய்திகள் :

சுவைக்கத் தூண்டும் சாட் : `ஜவ்வரிசி கிச்சிடி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

post image

ஜவ்வரிசி கிச்சிடி

தேவையானவை:

ஜவ்வரிசி - ஒரு கப்

உருளைக்கிழங்கு - ஒன்று (தோலுரித்து, வேகவைத்து சிறிதாக வெட்டிக்கொள்ளவும்)

சீரகம் – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)

ஒன்றிரண்டாக உடைத்த வேர்க்கடலை –

அரை கப்

சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

ஜவ்வரிசி கிச்சிடி

செய்முறை:

ஜவ்வரிசியைச் சிறிது தண்ணீர்விட்டு கால் மணி நேரம் ஊறவைத்து தண்ணீரைக் கீழே ஊற்றிவிடவும். மீண்டும் ஜவ்வரிசி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அதனை ஆறு மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து ஜவ்வரிசியை உதிர் உதிராக எடுத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இதில் ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு, உப்பு, எலுமிச்சைச்சாறு, சர்க்கரை, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் கொழுக்கட்டை' - வீட்டிலேயே செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் கொழுக்கட்டைதேவையானவை: அரிசி மாவு – அரை கப் + ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் – கால் கப் + ஒரு கப் தேங்காய்ப்பால் – ஒரு கப் வெல்லம் – 100 கிராம் உப்பு – சுவைக்கேற்ப ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிக... மேலும் பார்க்க

சுவைக்கத் தூண்டும் சாட் : `சைனீஸ் பேல்' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

சைனீஸ் பேல்தேவையானவை: ஹாக்கா நூடுல்ஸ் – ஒரு பாக்கெட் (சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்) குடமிளகாய் – ஒன்று முட்டைகோஸ் – கால் கிலோ வெங்காயத்தாள் - ஒரு கட்டு பொடியாக நறுக்கிய பூண்டு – 3 பற்கள் செஷ்வ... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `தேங்காய்ப்பால் திரட்டு' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

தேங்காய்ப்பால் திரட்டுதேவையானவை: தேங்காய்ப்பால் – ஒரு கப் அரிசி மாவு – 100 கிராம் பொடித்த கருப்பட்டி – 400 கிராம் உப்பு – ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன் தண்ணீர் – 350 மில்லிதேங்காய்ப்பால் ... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `ஹாட் சில்லி பிரெட்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

ஹாட் சில்லி பிரெட்தேவையானவை: சாண்ட்விச் பிரெட் – 5 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன் சிறிய சதுரங்களாக நறுக்கிய குடமிளகாய் –... மேலும் பார்க்க

சுவைக்கத் தூண்டும் சாட் : `சோளே குல்ச்சா' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?

சோளே குல்ச்சாசோளே மசாலா செய்ய தேவையானவை: வெள்ளைப்பட்டாணி - ஒரு கப் (4 மணி நேரம் ஊறவைக்கவும்) வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கியது) தக்காளி - இரண்டு (பொடியாக நறுக்கியது) சாட் மசாலாத்தூள் - அரை டேபிள்ஸ... மேலும் பார்க்க

15 நிமிடங்களில் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்: `டோஸ்டு பொட்டேட்டோஸ்' - வீட்டிலேயே சிம்பிளாக செய்வது எப்படி?

டோஸ்டு பொட்டேட்டோஸ்தேவையானவை: உருளைக்கிழங்கு – 3 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய குடமிளகாய் – ஒரு டேபிள்ஸ்பூன் வ... மேலும் பார்க்க