ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'...
சுவைக்கத் தூண்டும் சாட் : `தவா புலாவ்' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?
தவா புலாவ்
தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்
குடமிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சைப்பட்டாணி – கால் கப் (அல்லது கால் கப் காய்ந்த பட்டாணியை ஊறவைத்து, பின்னர் வேக வைத்துக்கொள்ளவும்)
காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது – ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா – 3 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெண்ணெய் – 3 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – அரை டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:
அரிசியை உதிர் உதிராக வேகவைத்து ஆறவிடவும். பட்டாணியை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் வெண்ணெய் விட்டு சூடேற்றி சீரகம் சேர்த்துத் தாளிக்கவும்.
இத்துடன் காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து நறுக்கிய தக்காளி, குடமிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, பாவ் பாஜி தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
இக்கலவையில் சிறிது தண்ணீர்விட்டு வதக்கி மிதமான தீயில் வேகவிடவும். மசாலா வெண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு வேகவைத்த பட்டாணி மற்றும் வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்கு கிளறி, எலுமிச்சைச்சாறு, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
காய்ந்த மிளகாய் - பூண்டு விழுது செய்ய... ஐந்து காய்ந்த மிளகாய்களை கால் கப் வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊறவைக்கவும். ஊறிய மிளகாய், ஏழு பூண்டு பற்கள் சேர்த்து, தண்ணீர்விடாமல் மைய அரைத்துப்பயன்படுத்தவும்.















