ஆட்சியில் ஓராண்டை நிறைவு செய்யும் ட்ரம்ப் -அரசியலில் அவர்செய்த அதகள 'சம்பவங்கள்'...
சுவைக்கத் தூண்டும் சாட் : `பேல் பூரி' - வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி?
பேல் பூரி
தேவையானவை:
பொரி - ஒரு கப்
நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்
உருளைக்கிழங்கு - ஒன்று (தோலுரித்து வேகவைத்து நறுக்கிக்கொள்ளவும்)
தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கியது)
பச்சைச் சட்னி - இரண்டு டேபிள்ஸ்பூன்
இனிப்புச் சட்னி - கால் கப்
எலுமிச்சைச்சாறு - அரை டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - கால் டேபிள்ஸ்பூன்
சாட் மசாலாத்தூள் - கால் டேபிள்ஸ்பூன்
வறுத்துப் பொடித்த சீரகத்தூள் - கால் டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன்
ஓமப்பொடி - கால் கப்
பேல் பூரிக்கான பூரி அல்லது தட்டு வடை (நொறுக்கியது) - இரண்டு டேபிள்ஸ்பூன்
அலங்கரிக்க:
பேல் பூரிக்கான பூரி அல்லது தட்டு வடை- 8
வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெயில் பொரித்த கடலைப்பருப்பு -
ஒரு டேபிள்ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:
ஒரு கிண்ணத்தில் பொரியைப் போட்டு, எலுமிச்சைச்சாறு தவிர தேவையான பொருள்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு எலுமிச்சைச் சாற்றினை இத்துடன் சேர்த்து மீண்டும் நன்கு கிளறிவைத்தால், மும்பை ஸ்டைல் பேல் பூரி ரெடி. ஒரு தட்டில் இந்தப் பேல் பூரியைப் பரப்பவும். பின்னர் அதன்மேலே அலங்கரிக்க கொடுத்துள்ள பொருள்களை வைத்து அலங்கரித்துப் பரிமாறவும்.















