Sirai: "விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்!" - எஸ்.ஏ. ...
சேலம் : சுட்டிக்காட்டிய விகடன்; சீரமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை - பெருமூச்சுவிட்ட வாகன ஓட்டிகள்!
சேலம் மாவட்டம் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காமலாபுரம் பிரிவு மற்றும் ஆர்.சி. செட்டிப்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலத்தின் கீழ் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக விபத்து ஏற்படுவதற்கான அபாயம் இருந்த நிலையில், அதனை சுட்டிக்காட்டி விகடன் செய்தியாக வெளியிட்டது.
இதன் விளைவாக, முதற்கட்டமாக அதிக பாதிப்பு இருக்கக்கூடிய குண்டும் குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டது. காமாலாபுரம் பிரிவு மேம்பால பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் சீரமைப்பட்ட நிலையில், இதனைத் தொடர்ந்து 19.12. 2025 அன்று ஆர்.சி. செட்டிப்பட்டி மேம்பால பகுதியில் இரண்டாம் கட்டமாக தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் பேசும் போது,
"மேம்பாலம் கட்டுவதற்கு முன்பிருந்த பழுதான சாலை வழியே தான் நாங்கள் பயணிக்க வேண்டிய நிலை இருந்ததால் தினமும் விபத்திற்கான அபாயமும், அச்சமும் இருந்துக்கொண்டே இருந்தது. ஆனால், விகடன் செய்தி விளைவாக சரி செய்யப்பட்டிருக்கிறது. எங்களின் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது" என்று தெரிவித்தனர்.
அந்தப்பகுதியில் வசிக்கும் ஒருவர் நம்மிடம் பேசும் போது,
"சாலைக்கு அருகில் குடியிருக்கும் நாங்கள் அடிக்கடி குண்டும் குழியுமான சாலையில் பயணிக்கும் வாகனங்களினால் எங்கள் மீது சிறுசிறு கற்கள் சிதரடிக்கப்படும். இனி அதுகுறித்து பயப்படத் தேவையில்லை " என்று கூறினார்.

இது குறித்து துணை பொது மேலாளர் நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனரிடம் பேசிய போது, " விபத்துகள் ஏற்படுவதை தவிர்த்தல் மற்றும் மக்கள் பாதுகாப்பு முதன்மையானது. எனவே விகடன் வெளியிட்ட செய்தி அடிப்படையில், அதற்கான பொறுப்பு அலுவலர்கள் வழி சாலை சீரமைக்கப்பட்டுள்ளது" என்றார்.


















