செய்திகள் :

சேலம்: லாரி மீது அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து; டிரைவர் பலி

post image

சேலம் மாநகரப் பகுதியில் இருந்து ஓமலூருக்கு பாரம் ஏற்றிச் சென்ற லாரி திடீரென டீசல் இல்லாததால், மாமாங்கம் சாலையிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சியில் இருந்து தர்மபுரி நோக்கி நெய் எடுத்துக்கொண்டு சென்ற ஈச்சர் லாரி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதி சேர்ந்த ஈச்சர் லாரி ஓட்டுனர் கோபி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து

மேலும், பின்னால் வந்துகொண்டிருந்த சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து ஈச்சர் லாரிமீது மோதி திடீரென தீப்பிடித்து. இதனால் சுற்றுலா வேன் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. பின்னர் தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் சுற்றுலா வேன் டிரைவர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சுற்றுலா வேனில் இருந்த 15 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுதொடர்பாக சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிமீது அடுத்தடுத்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டி: கழிவறை இல்லாத கூலித் தொழிலாளர்கள் குடியிருப்பு; காட்டுமாடு முட்டி பெண் பலியான சோகம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கொதுமுடி படுகர் கிராமம். மலை காய்கறி, தேயிலை சாகுபடி அதிகம் நடைபெறும் இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலித... மேலும் பார்க்க

MSC ELSA 3: கடலில் மூழ்கிய லைபீரியக் கப்பல்; சிறைப்பிடித்த கேரள அரசு; ரூ.1227 கோடி செலுத்தி மீட்பு!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து, கொச்சி துறைமுகத்துக்குச் சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா நாட்டு சரக்குக் கப்பல் மே 24-ம் தேதி கொச்சியில் இருந்து 38 நாட்டிக... மேலும் பார்க்க

36 பயணிகளுடன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்; கவலைக்கிடமான நிலையில் ஒருவர் - ஊட்டியில் சோகம்!

நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து இன்று மதியம் தங்காடு கிராமத்தை நோக்கிப் பயணிகளுடன் இயக்கப்பட்ட தனியார் மினி பஸ் ஒன்று, மணலாடா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வேளையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து,... மேலும் பார்க்க

ஊட்டி: பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ் - 30 பேர் காயம்... கோர விபத்தின் காட்சிகள்!

பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிகளுடன் பள்ளத்தில் கவிழ்ந்த மினி பஸ்பயணிக... மேலும் பார்க்க

இந்தூரில் அசுத்தமான தண்ணீரால் 7 பேர் பலி: `தேவையில்லாத கேள்வி வேண்டாம்'- சீறிய அமைச்சர்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாக்யரபுரா என்ற இடத்தில் அசுத்தமான தண்ணீரை குடித்ததால் 200க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில அரசு அதிகாரபூர்வம... மேலும் பார்க்க

Switzerland: புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தீ விபத்து; 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

உலகமெங்கும் புத்தாண்டை வெகு விமரிசையாக கொண்டாடி வரவேற்று வருகின்றனர். அப்படி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் சுவிட்சர்லாந்தில் பயங்கர தீ விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த தீ விபத்தில் 40-க்கும் ம... மேலும் பார்க்க