செய்திகள் :

சொந்த ஊர் தேனியில் இயக்குநர் பாரதிராஜாவின் உடல்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மக்கள்

post image

இயக்குனர் இமயம் என்று போற்றப்படுகிற பாரதிராஜா நேற்று காலமானார். பாரதிராஜாவின் உடல் சென்னை, நீலங்கரையில் உள்ள அவருடைய இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

தன் மகள் ஜனனியிடம், தான் இறந்தால், தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தன்னுடைய உடலைப் புதைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார் பாரதிராஜா. அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக பண்ணை வீட்டில் பாரதிராஜாவின்  உடல் அடக்கம் செய்யப்படும் என நேற்று அவருடைய குடும்பத்தினர் தரப்பில்  தெரிவிக்கப்பட்டது. 

முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு நேற்று தெரிவித்திருந்தது. 

இதையடுத்து தேனி மாவட்டம் காட் ரோட்டில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் உடல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. 

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப் மற்றும் தேனி மாவட்ட எஸ்.பி சினேக பிரியா ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பண்ணை வீட்டின் முன்புறத்திலேயே உடலைப் புதைப்பதற்காக குழி தோண்டப்பட்டது.

பாரதிராஜாவுடன் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கும் இடம்
பாரதிராஜாவுடன் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கும் இடம்

இதையடுத்து நேற்று இரவு சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக பாரதிராஜாவின் உடல் கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 6 மணி அளவில் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு வந்தடைந்தது.  இன்று மதியம் 3 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக பாரதிராஜாவின் உடல் வைக்கப்பட்டு, மதியம் மூன்று மணிக்கு முழு அரசு மரியாதையுடன் பாரதிராஜாவின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

இதற்காக பண்ணை வீட்டைச் சுற்றி  சுமார் 700 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாரதிராஜாவின் நண்பர்களும், தேனி மாவட்ட மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பாரதிராஜா : "அப்பவும் அவனை நினைக்காமல் தூங்கினதில்லை!" - கனவை நோக்கி ஓடிய நண்பர்களின் கதை!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று இயற்கை எய்தினார். கடந்த 5 தசாப்தங்களில் சினிமா கண்ட அத்தனை வளர்ச்சிகளுடன் பயணித்தவர் பாரதிராஜா. பாரதிராஜாவும், இளையராஜாவும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். சினிமாவுக்க... மேலும் பார்க்க

`இன்றுவரை அதுதான் டாப் மார்க்' 16 வயதினிலே டு கடல் பூக்கள்! - பாரதிராஜாவும் விகடனின் மதிப்பெண்களும்!

கிராமத்து மண்ணின் வாசனையை வெள்ளித்திரையில் வீசச்செய்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆறா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவிற்கு அரசியல் தலைவர்களும், திரை உல... மேலும் பார்க்க

"உங்களைப் பொறுத்தவரையில் எது நல்ல படம்?'' - கெளதம் மேனனின் கேள்விக்கு பாரதிராஜா அளித்த பதில்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்க... மேலும் பார்க்க

Bharathiraja: `` `எங்கய்யா புடிச்சீங்க இவனை'ன்னு பாரதிராஜா கேட்டார்" - 16 வயதினிலே டாக்டர் சத்யஜித்

இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டார். தமிழ்த் திரையுலகம் கண்ணீரில் தத்தளித்தபடி, அந்தக் கிராமத்து நாயகனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினி ... மேலும் பார்க்க

``ஈழப் பிரச்னை பத்தி நான் ஒரு படம் பண்ணனும்னு பிரபாகரன் ஆசைப்பட்டாரு" - 'தடம்' பேட்டியில் பாரதிராஜா

2008-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது. அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து, "எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம்... மேலும் பார்க்க

Bharathiraja : "வாட்சை வித்து, ஊர் வந்து சேர்ந்தேன்!" - ராணுவப் பயிற்சி பற்றி பாரதிராஜா

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்க... மேலும் பார்க்க