செய்திகள் :

'சொந்த மைதானத்தில் ஆர்.சி.பியை எதிர்கொள்வதில் மகிழ்ச்சி!' - இறுதிப்போட்டி குறித்து கில்

post image

ஐபிஎல் தொடரில் மூன்றாவது முறையாக குஜராத் அணி இறுதி போட்டியை எட்டியுள்ளது. நாளை (மே31)அகமதாபாத் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ள உள்ளது.

நேற்று நடந்த குவாலிஃபையர் 2 போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 214 ரன்கள் எடுத்தது. இதனை விரட்டி களமிறங்கிய குஜராத் அணி வீரர்கள் இந்த ஸ்கோரை 19வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றனர். இதன் மூலம் தனது மூன்றாவது பைனலில் கால் பதித்துள்ளது குஜராத் அணி.

கில்
கில்

இந்த போட்டிக்கு பின்னர் பேசிய அணியின் கேப்டன் சுப்மன் கில்,

"டாஸ் போடும்போது சில குழப்பங்கள் இருந்தன. இருந்தாலும் இந்த வெற்றியைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கும் சாய் சுதர்சனுக்குமான கூட்டணி மிகவும் நன்றாகப் பொருந்திப் போகிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் ஆட்டத்தை மிக நன்றாகப் புரிந்து வைத்துள்ளோம்.

களத்தில் பேட்டிங் செய்யும்போது எங்களுக்குள் இருக்கும் கம்யூனிகேஷன் மிகவும் சிறப்பாக இருக்கும்.

சாய் சுதர்சன் ‘ஹிட்-விக்கெட்’ ஆன விதம் விசித்திரமானது. அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக இப்படி யாரும் பார்த்திருக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் அவர் தன் கையில் டேப் ஒட்டியிருந்த வீடியோவைப் பார்த்தேன். அடுத்த போட்டியில் நானும் அதைச் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

கில்
கில்

இன்று நான் மிகவும் அமைதியாக, ஒரு தனி மனநிலைக்குள் இருந்தேன். பந்துவீச்சாளர்களை மட்டுமே கவனித்து, பந்து விழும் இடத்திற்குத் தகுந்தபடி விளையாடினேன். ஃபார்மில் இருக்கும்போது களமே கண்ணில் தெரியும், பந்து பேட்டின் நடுவில் சரியாகப் படும்.

எதிரணியை 180–190 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம். ஆனால் அவர்கள் 214 ரன்கள் எடுத்துவிட்டனர். நல்ல தொடக்கம் கிடைத்ததும் போட்டியை நானே முடிக்க நினைத்தேன். ஆனால் நான் அவுட் ஆன விதம் வருத்தமளிக்கிறது.

சொந்த மைதானத்தில் ஃபைனல் விளையாடப் போகும் உணர்வு சிறப்பாக உள்ளது. போட்டியின் முக்கியத்துவத்தைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல், கணக்குகளைத் தள்ளிவைத்துவிட்டு, பதற்றமின்றி நம் இயல்பான கிரிக்கெட்டை விளையாடினாலே மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படும். அதன் பிறகும் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை," என்று நம்பிக்கையுடன் பேசியிருந்தார்.

மனு பாக்கரை ஒலிம்பிக் நாயகியாக்கிய `குரு' - கோச் ஜஸ்பால் ராணா திடீர் மரணம்; சாம்பியனை இழந்த இந்தியா

இந்தியாவின் துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவானும், பாரீஸ் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பயிற்சியாளருமான ஜஸ்பால் ராணா (49), உடல்நலக்குறைவால் திடீரென காலமானார். டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்ச... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் தொடரில் கெய்மரை வீழ்த்தி பட்டம் வென்ற பிரக்ஞானந்தா; வரலாற்று சாதனை!

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

Praggnanandhaa: நார்வே செஸ் பட்டம் வென்ற முதல் இந்தியர்; வரலாற்று சாதனை படைத்த பிரக்ஞானந்தா! |Live Updates

நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. நார்வே செஸ் போட்டி மே 25 முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் குகேஷ், பிரக்ஞானந்தா, மாக்னஸ் கால்சன் வின்சென்ட் கெய்மர்... மேலும் பார்க்க

வடகொரிய மகளிர் கால்பந்து அணி வரலாற்றுச் சாதனை! அதிபர் கிம் ஜாங் உன்னுடன் கொண்டாடிய அரிய காட்சி

உலக நாடுகளை எப்போதுமே தனது ராணுவ பலத்தால் அதிரவைக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், முற்றிலும் ஒரு மாறுபட்ட நெகிழ்ச்சியான கோணத்தில் உலகிற்கு காட்டியுள்ளனர் அந்நாட்டு மகளிர் கால்பந்து அணியினர். 'ஏஎப்ச... மேலும் பார்க்க

ஒண்ணு இல்ல, ரெண்டு! ஒரே தொடரில், கார்ல்சனின் சொந்த ஊரில் இருமுறை வீழ்த்தி பிரக்ஞானந்தா செய்த சம்பவம்

செஸ் உலகின் சக்கரவர்த்தி என வர்ணிக்கப்படும் மேக்னஸ் கார்ல்சனை, அதுவும் அவரது சொந்த மண்ணில், ஒரே தொடரில் இருமுறை வீழ்த்துவதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத சாதனை. அந்த அசாத்திய சாதனையை நிகழ்த்திக்... மேலும் பார்க்க

'காலத்துக்கு ஏத்த மாதிரி மாறனும்!' - 38 வயதில் விராட் கோலி எப்படி சாதித்தார்?

ஆர்.சி.பி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. விராட் கோலியின் நீண்ட கால கனவு இது. ஆனால், அவருடைய கேப்டன்சியில் இந்த சாதனையை அவரால் நிகழ்த்தவே முடியவில்லை. ரஜத் பட்டிதார் வந்த பிற... மேலும் பார்க்க