செய்திகள் :

சோமசுந்தரி - சிறுகதை

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

“ராணிக்கா... திருளா வருதே ஆச்சி இன்னும் ஊர்லேருந்து வரலியா?” 

விடிகாலையில் எழுந்து வாசல் தெளிக்க வந்த ராணியிடம் எதிர் வீட்டுத் திண்ணையில் அகத்திக்கீரை ஆய்ந்து கொண்டிருந்த பேச்சி தன் உச்ச குரலில் விசாரித்தாள். அவள் ஆச்சி என்று குறிப்பிட்டது ராணியின் மாமியார் சிவகாமியைத்தான். . . 

ராணி தண்ணீர் தெளித்தவண்ணம் நிமிர்ந்து பார்க்காமலேயே பதில் சொன்னாள்,

“வாராவ. வாராவ..... இன்னிக்கி மதியம் செங்கோட்ட பாசஞ்சருல வந்து திருநவேலியில எறங்குறாவளாம். ஒங்க அண்ணாசி போயி கூட்டிக்கிட்டு வரப் போயிருக்காவ” என்று சலிப்பாக் பதிலளித்தாள் ராணி.

ஊரிலுள்ள ‘சோமநாதர் சமேத சோமசுந்தரி’ கோவிலில் ஆண்டுதோரும் நடைபெரும் ஆவணித் திருவிழா நாளை துவங்குகிறது. திருவிழாவின் முதல் நாளன்று, கோவிலில் கொடியேற்றம்.  கோவிலுக்கு வரி செலுத்தும் ஊர் மக்கள் கொடியேற்றத்தன்று ஊரில் இருக்க வேண்டும் என்பது அந்த ஊரின் மறபு. கொடியேற்றத்தன்று ஊரில் இல்லாவிட்டால் அது குடும்பத்துக்கு ஆகாதாம். அதேபோல, கொடியேற்றிய பின் ஊரைவிட்டு வெளியே செல்லக்கூடாது. 

அவசர வேலையாய் வெளியூர் செல்ல நேர்ந்தால், கோவிலுக்குச் சென்று, அம்மனிடம் மான்சீகமாக உத்தரவு பெற்றுதான் செல்லவேண்டும்; ஆனால் இரவுக்குள் ஊர் திரும்பிவிட வேண்டும். ‘ராத்தங்க்க் கூடாது’. இது இந்த ஊர் மக்கள் அனைவரும் தவறாது கடைப்பிடித்துவரும் கலாச்சாரங்களில் ஒன்று.

“ஏங்க்கா சலிப்பா பேசுற” என்று கேட்டபடி ராணியை நோக்கி வந்தாள் பேச்சி;

“பொறவென்ன பேச்சி? உனக்கு தெரியாதா? நா அவுகளை எங்க அம்மையாட்டம் நெனச்சி எப்படி பாத்துக்கிறேன். ஒரு நிமிசத்தில என்ன தூக்கி எரிஞ்சிட்டாவளே. சத்தம் போட்டுட்டு ஊரக்கூட்டி, எல்லார் முன்னாடியும் என்ன திட்டு திட்டினாவ? இத்தனைக்கும் நான் என்னத்த சொல்லிட்டேன்? நீங்கள்ளாம் வந்து சொல்லியும் அடங்குச்சா பாரு அந்த கெழம். இங்க கோவிச்சிக்கிட்டு பொண்ணு ஊட்டுக்கு போறதும்; அங்க முறுக்கிக்கிட்டு இங்கே வாரதும்;.... இதுல, இவியள ரயிலேத்த ஒரு ஆளு; கூட்டியார ஒரு ஆளு... இதுவே பெரிய சோலியாப் போச்சி ஒங்க அண்ணாச்சிக்கு” என்று கொட்டித்தீர்த்தாள் ராணி.

ராணியின் மாமியார் சிவகாமியின் இயல்பாக எல்லோரிடமும் சிரித்துப் பேசும் சாந்த குணம் உள்ளவள் தான். ஆனாலும் திடீர் திடீரென்று கோபம் வந்துவிடும். அப்படித்தான் மூன்று மாத்த்துக்கு முன்னாள் ஒரு நாள் ஏதோ ஒரு ‘உப்பு பொறாத’ பிரச்சினை. மாமியார் பேச, ராணி அதற்கு பதிலுக்கு ஏதோ சொல்ல, பெரிய சண்டை.

பக்கத்து வீடு, எதிர் வீடு என்று எல்லோரும் பஞ்சாயத்துக்கு வந்துவிட்டனர். ஆனாலும் சிவகாமியின் கோபம் அடங்கவில்லை. “இனிமேல் உன் முகத்துல் முழிச்சாக்கா என்னை ஜோட்டால அடிடீ ..“ என்று மருமகளை சபித்துவிட்டு, கிளம்பி திருச்சி போனவள்தான். இப்பொழுது, கோவில் திருவிழா என்றதும் திரும்பி வருகிறாள்.

நாளை திருவிழா மட்டுமல்ல ‘சின்னக்குட்டி’ பகவதிக்கு பிறந்த நாளும் கூட. சிவகாமிக்கு, ‘சின்னக்குட்டி’ மேல் தனி பாசம். “அவ என்னக்கொண்டு இருக்காடா” என்று பெறுமை கொள்வது சிவகாமியின் வழக்கம். எனவே அவள் வருவத்ற்கு பிறந்த நாளும் ஒரு முக்கிய காரணமாக இருக்க வேண்டும்

அம்மாவை அழைக்க, ராணியின் கணவன் சுந்தரம் காலையிலேயே புறப்பட்டு திருநெல்வேலி ஜங்ஷனுக்கு சென்றுவிட்டான்... “மகராசி திருவிழாவும் அதுவுமா, வந்து என்ன க்ச்சேரி வைக்கப் போகிறாளோ தெரியலயே...” என்ற கவலை ராணிக்கு.

அருகிலிருக்கும் ஒரு ரசாயனத்தொழிற்சாலையில் இஞ்சினீயராக் வேலை பார்க்கும் சுந்தரத்துக்கு தன் அம்மாவிடம் அளவிடமுடியாத பக்தி. ‘தாயுமாகி தந்தையுமாகி’ வளர்த்து ஆளாகியவள் அல்லவா? அதனால் அம்மா என்ன சொனாலும் மறுபேச்சில்லை.

அதேபோல ராணியும் மாமியாரை தன் தாயைப் போல மிகுந்த மரியாதையுடன் இருப்பவள். ஆனால் மற்றவர்களிடமெல்லாம் கனிவாகப் பேசும் சிவகாமிக்கு, ராணியை மட்டும் வித்தியாசமாக நட்த்திவந்தாள். ராணியிடம் குற்றம் கண்டுபிடிப்பதிலும், சீண்டி அழவைத்துப் பார்ப்பதிலும் ஒரு குரூர திருப்தி மாமியார் சிவகாமிக்கு.


சிவகாமியின் கணவர் தாசில்தாராக வேலை பார்த்தவர். கிட்ட்த்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகிவிட்டார் அப்பொழுது, சுந்தரத்துக்கு ஐந்து வயது; சுந்தரத்தின் தங்கை கலா, ஒரு வயது குழந்தை. ஓரளவுக்கு வசதியான குடும்பம்தான் என்றாலும், ஆண் துணை இல்லாமல் சொந்தபந்தங்களை நம்பாமல், மகனை.

இஞசினீயரிங் படிக்கவைத்து, மகளையும் பட்டப்படிப்பு முடிக்கவைத்து, ஒத்தை ஆளாக பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணமும் செய்து வைத்து விட்டாள். மாப்பிள்ளை இவர்களுக்கு தூரத்து சொந்தம். அவருக்கு திருச்சி பெல் தொழிற்சாலையில் பெரிய உத்தியோகம். தாய் தந்தை இல்லாததால், மாமியாரைத் தன் தாயாக எண்ணி அன்பு செலுத்துகிறார். இதனால் சிவகாமி மகள் வீட்டில் சில நாள்; மகன் வீட்டில் சில நாள் என்று ஆட்சி செய்கிறாள். யாருக்கும் கிடைக்குமா இந்த் அதிஷ்ட்டம்?

மகனும் மருமகனும் ஒருபோல் கொண்டாடுவது சிவகாமிக்கு மிகுந்த அதிகார மமதையை உண்டுபண்ணிவிட்டது. அது மட்டுமல்லாமல் குடும்பத்தின் பூர்வீக சொத்தும் இவர் பெயரில்தான் இருக்கிறது. ராணிக்கோ உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. அவளது தந்தையும் தாயும் சில ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகிவிட்டனர். தன் அதிகாரங்களைக் காட்ட இப்படி ‘நாதியில்லாத’ ஒரு மருமகளைவிட்டால் வேறு யார் கிடைப்பார்கள்?

ஆயிற்று, ராணிக்கும் சுந்தரத்துக்கும் கல்யாணமாகி பத்து வருடம் ஓடிவிட்ட்து. பத்து வருட்த்தில் ஐந்து பிள்ளைகள் அடுக்கடுக்காக. மூத்தவன் ராஜாராமன் நான்காம் வகுப்பிலும், அவனை அடுத்து வரிசையாக இரண்டு பெண்கள், கோமதி, முத்து, முறையே இரண்டாம் வகுப்பிலும், முதல் வகுப்பிலும் படிக்கிறர்கள். க்டைசி பெண் பகவதிக்கு மூன்று வயது. கடைக்குட்டி வினாயகத்துக்கு ஒரு வயது. கணவருக்கு நல்ல சம்பளம்; ஓரளவுக்கு வசதியான வாழ்க்கைதான். ஆனால் மூன்று பெண் குழந்தைகளை கரை சேர்க்க வேண்டுமே என்கிற கவ்லை கணவன் மனைவி இருவருக்கும் அதிகம். அதனால் இருவரும் ரொம்ப சிக்கனம்.

கஷ்ட்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை செய்து சேர்த்துக் கொண்டு வருகிறாள் ராணி. ராணிக்கு கடவுள் பக்தி அதிகம். வெள்ளி, செவ்வாய் வந்தால் போதும். வீட்டைக் கழுவி, சாமிக்கு பூசை, புனஸ்க்காரமெல்லாம் முடியும் வரை ‘பச்சைதண்ணி’ கூட குடிக்க மாட்டாள். கிழமைக்கு ஒரு விரதம்,. திருச்செந்தூர் முருகனும், சோமசுந்தரி அம்மனும்தான் கண் கண்ட தெய்வம் ராணிக்கு. அவர்கள் தன்னைக் கைவிடமாட்டார்கள் என்ற ஆழமான நம்பிக்கை. ராணிக்கு மட்டுமல்ல அந்த் ஊர் மக்கள் அனைவருக்கும் சோம நாதரும் சோமசுந்த்ரியும்தான் கண்கண்ட தெய்வங்கள். அந்த ஊர் மக்களில் ஏராளமான சோமசுந்த்ரங்களும், சோமசுந்தரிகளும் இருப்பதை வைத்தே இதை யூகித்துவிடலாம்.

திருநெல்வேலியிலிருந்து அம்மாவும் பிள்ளையும் வந்து சேர்வதற்கு இரவு மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்ட்து. மாமியாருக்காக சாப்பிடாமல் காத்திருந்து அவர்களுக்கு இட்டிலி சுட்டுக் கொடுத்துவிட்டு அன்று படுக்கைக்குச் செல்வதற்கு மணி பன்னிரண்டு ஆகிவிட்ட்து. ராணி சாதாரணமாக பேச்சு கொடுத்துப் பார்த்த்தற்கு, சிவகாமி என்னவோ அளவாகத்தான் பதில் பேசினாள். மனதிற்குள் அன்று நடந்த சண்டையின் தாக்கம் இன்னும் அகலவில்லை போலும்.


மறுநாள், விடியற்காலையிலேயே எழுந்து, குளித்து எல்லோரும் தயாராகிவிட்டனர்; கோவில் கொடியேற்றம் மட்டுமல்லாமல் சின்னக் குட்டி பகவதியின் பிறந்தநாளும் அல்லவா. பிறந்த் நாள் என்றால், நகரத்தைப் போல ஊரைக் கூட்டி கேக் வெட்டுவது, மெழுகுவர்த்தியை அணைப்பது, பலூன் கட்டுவது, பரிசு வழங்குவது எல்லாம் இருக்காது எங்கள் கிராமங்களில். கோவிலுக்கு சென்று சுவாமிக்கு அர்ச்சனை செய்வார்கள்; குழந்தைக்கு புதுத் துணி உண்டு; வசதியானவர்கள் கோவிலில் அன்னதானம் செய்விப்பார்கள்; அவ்வளவுதான்.

இன்று கொடியேற்றமாதலால், அன்னதானத்துக்கு அனுமதி இல்லை. குழந்தை பெயரில் அர்ச்சனை செய்வித்து சன்னிதான்த்தில் கொஞ்ச நேரம் அமர்ந்து தன் ருத்ராட்ச மாலையை உருட்டி தியானம் செய்த்பின்னார், தன் சுருக்குப் பையிலிருந்து ஒரு தங்க்ச் சங்கிலியை எடுத்து குழந்தை பகவதியின் கழுத்தில் அணிவித்தாள் சிவகாமி.

ராணிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை. மாமியார் தன் கோபதாபங்களை மறந்து தன் குழந்தைக்கு பரிசும் அளித்தது அவளுக்கு பெருத்த நிம்மதியைக் கொடுத்தது. சுந்தரத்தையும் இழுத்து வந்து எல்லோருமாக சிவகாமியின் காலில் விழுந்து நமஸ்கரிக்க வைத்தாள்.. சிவகாமிக்கும் ரொம்ப மகிழ்சி. தனக்கு பெரிய முக்கியத்துவம் கிடைக்கும் பொழுது மகிழாத மனித மனம் உண்டா?

எல்லோரும் வீடு திரும்ப, மதியம் வடை பாயாசத்துடன் சமையல் தயார் செய்தாள் ராணி. அந்த நாள் முழுதும் ஒரே கொண்டாட்டந்தான்... இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை எனபதால் தெருவே குழந்தைகள் ராஜ்ஜியமாக இருந்தது. குழந்தைகள் எல்லாம் தெருக்களில் குதியாட்டம் போட்டவண்ணம் இருந்த்னர்.

திருவிழா நடக்கும் பத்துநாட்க்களும் கோவிலில் அன்னதானம் வழங்கப்படும் என்பதால் காவி உடுத்திய சாமியார்கள், பிச்சைக்காரர்கள் எல்லாம் பல ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள். ரங்கராட்டினம், குதிரை சக்கரம், குரங்கு வித்தைக்கார்ர்கள், பலூன் வியாபரிகள், ஜவ்வு மிட்டாய் வியாபாரிகள், பொம்மைக் கடை என்று திருவிழாவுக்கான சகல அம்சங்களும் கோவிலைச்சுற்றி முளைத்து விட்டன. ராணியின் வீடும், கோவிலுக்கு மிக அருகில், தேரடித்தெருவில்தான் என்பதால், எல்லா பசங்களும் கோவில் வாசலில் தான் கும்மாளமிட்டனர்.

மாலை வேளை; பிள்ளைகளெல்லாம் வீடு திரும்பினர். மதியம் செய்த பாயாசம், வடை போன்றவற்றை ஒரு கை பார்த்தனர். அப்பொழுதுதான் சிவகாமி கவனித்தாள், குழந்தை பகவதியின் கழுத்தில் இருந்த தங்க்ச் சங்கிலியைக் காணவில்லை. “ராணி இங்கே வா. சின்னகுட்டி கழுத்திலிருந்த சங்கிலி எங்கே? நீ கழற்றி பத்திரமாக வைத்திருக்கிறாயா?” என்று கூவினாள் சிவகாமி. ராணிக்கு சொரேலென்றது. “என்ன சங்கிலியைக் காணலையா? நான் கழட்டலையே அத்தை” என்று சொல்லும் பொழுதே கண்களில் கண்ணீர் முட்டிவிட்டது. சிவகாமி போட்ட சத்த்தில் தெருப்பக்கத்திலிருந்த சுந்தரம் ஓடி வந்தான். “என்ன என்ன” என்று கத்த், எல்லோரும் ஒரே சமயத்தில் பேச, ஒரே க்ளேபரம்மாகிவிட்டது வீடு.

கோபத்தில், பெரியவன் ராஜாராமனைப் பளார் பளார் என்று அறைந்தான் சுந்தரம். “வீட்டுக்கு பெரிய பிள்ளை. என்னடா பண்ணிக்கிட்டு இருந்த் நீ, தங்கசி கழுத்துல இருக்கிற சங்கிலி போரது தெரியாம..” அவன் வீரிட்டு அழ ஆரம்பித்தான். மற்றபிள்ளைகளும் சேர்ந்து அழுதன.

கோபத்தின் உச்சியில் இருந்தாள் சிவகாமி. “ அவன ஏண்டா அடிக்கிற, சின்னப் பிள்ளையைப் போட்டு? ஓன் பொண்டாட்டியப் போயி கேளு. வீட்டு பொம்பள ஒழுங்கா இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா? கழுத்துல சங்கிலியோட புள்ளய வெளியில வெளயாட உடல்லாமா? அறிவு வேணாம்? மூணு பவுன் சங்கிலி. ஒஙக் அப்பாவோட பென்ஷன் பணத்துல கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்சது. இப்படி தொலைப்பாளா படுபாவி...” என்று பழியைத் தூக்கி ராணி தலையில் தூக்கிப் போட்டாள் சிவகாமி

சுந்தரம் நிசப்தமானான். அம்மா சொல்லுவது புறிந்தது ‘சங்கிலி தொலைந்ததற்கு ராணி தான் முழு பொறுப்பு. கொஞ்ச நேரம் அழகு பார்த்துவிட்டு, பத்திரமாக் அதைக் கழற்றி பீரோவில் அல்லவா வைத்திருக்கவேண்டும். திருவிழாக் கூட்டதில் பிள்ளைகளை நகையுடன் விளயாட அனுமதித்தது அவளது தவறுதானே.’ அவனுக்குள் கோபம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

“நா என்ன பண்ணுவேன் அத்தை. நான் சமையக்கட்டுல வேலயா இருந்தேன். நீங்க எல்லாருந்தான் அவள்ளோட வெளயாடிக்கிட்டு இருந்தீங்க....” ராணி பதில் சொல்லி முடிப்பதற்க்குள் ப்ளார் என்று இடிமாதிரி ஒரு அறைவிட்டான் சுந்தரம். “அம்மா....” என்று சுருண்டு விழுந்தாள் ராணி. “பேச்சுக்கு பேச்சு எதுத்தாடீ பேசுற. பொறுப்பில்லாம நகையைக் காணடிச்சிட்டு ஒனக்கு திமிர் பேச்சு வேறயா” என்று கர்ஜித்துவிட்டு, விருட்டென்று வீட்டைவிட்டு வெளியேறினான் அவன். ஒரே வினாடியில் அந்த வீடு ஒரு மயான அமைதியில் ஆழ்ந்தது. அழக்கூட திராணியில்லாமல் ராணி அங்கேயே விழுந்து கிடந்தாள்.

சிவகாமி அவள் பங்குக்கு ஒரு ஒப்பாரி வைத்தாள். “எங்க ஊட்டு காசு எப்பிடியெல்லாம் கரியாவுது. துக்கிரி புடிச்ச மூதி. இது எங்கே கொண்டு விடப்பொவுதோ கடவுளே..“ என்று பிலாக்கணம் பாடிவிட்டு, பக்கத்துத் தெருவில் இருக்கும் உறவினர் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டாள். குழந்தைகள் வந்து “அம்மா.. அம்மா.. எழுந்திறிம்மா” என்று அழுதவண்ணம் ராணியை எழுப்பின. க்டைக்குட்டி வினாயகம் அழுது அழுது சோர்ந்து போய்விட்டான்.

“என்னை ஏன் இப்படி சோதிக்கிற தாயே சோமசுந்தரி. ஒனக்கு நான் என்ன குறை வச்சேன். உன் சன்நிதியில கொஞ்ச நேரம் சந்தோஷமா இருந்த்துக்கு இவ்வளவு பெரிய தண்டனயா? நண்டும் சிண்டுமா அஞ்சு புள்ளங்க இல்லன்னா உன் தெப்பகுளத்துல் உழுந்து என் உசிர உட்டுவேனே. இப்ப நான் என்ன பண்ணுறது தாயே. என்னப் பெத்தவங்களயும் நீயே எடுத்துக்கிட்டே. நான் யாருகிட்ட போயி கேக்குறது தொலஞ்சு போன சங்கிலிய? எனக்கு ஒரு அண்ணன் தம்பி இருந்தாலும் போயி கேட்க்கலாம். ஆனா என்ன தனிமரமா படச்சி உட்டுட்டே....” மனம் வலிக்க புலம்பினாள் ராணி.

நீண்ட் நேரத்துக்குப் பின்னர் ஒருவாரு தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு எழுந்தாள் ராணி. அழுதுகொண்டிருந்த பிள்ளைகளை சமாதானப் படுத்திவிட்டு, அவர்களுக்கு சாப்பாடு அளித்து பின் தூங்க்ச்செய்தாள். களைப்பு மிகுதியால் தானும் அப்படியே சுவற்றில் சாய்ந்தபடி கண்ணயர்ந்து விட்டாள். அந்த அரைகுறை தூக்கத்தில் பலப்பல கனவுகள்.... முன்னுக்குப் பின் முறணாக; குழப்பமாக...பொழுது விடியும் நேரம் இருக்கும். மீண்டும் ஒரு நீண்ட கனவு. இவள் ஒரு அகண்ட மைதானத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாள். யாரே துரத்துவது போல பயம் இவளைத் தள்ளிக்கொண்டிருக்கிறது. ஓடுகிறாள்.... ஓடுகிறாள்.. முடிவு தெரியாத் ஓட்டமாக இருக்கிறது. அப்பொழுது அங்கே ஒரு பெண் நிற்கிறாள். நல்ல உயரம்மாக சிவப்பு நிறத்தவளாக இருக்கும் அந்தப் பெண், தூய பசுமை நிறத்தில் புடவை அணிந்திருக்கிறாள். அந்தப் பெண்ணைப் பார்த்த்தும் ஓடிக்கொண்டிருந்த ராணி அப்படியே அவள் முன்னே சென்று நிற்கிறாள். அந்தப் பெண் சிரித்தபடி, “ இதையா தேடினாய்” என்று தன் கையை விரித்துக் காட்ட, அங்கே தொலைந்துபோன டாலர் சங்கிலி இருந்த்து. உடனே விழித்துக் கொண்டாள் ராணி. என்ன கனவு இது? இதற்கு என்ன பொருள்? ஒனறும் விளங்கவில்லை.

வழக்கம் போல எழுந்து தன் காலைக் கடமைகளைச் செய்யத் துவங்கினாள் ராணி. சொந்தக்காரர்கள் வீட்டிற்க்கு சென்ற சிவகாமி இரவு அங்கேயே தங்கிவிட்டாள். சுந்தரம் இரவு முழுவதும் வீடு திரும்பவில்லை. எங்கு செல்வது என்று தெரியாமல், தான் பணிபுரியும் தொழிற்சாலைக்குப் போய் விட்டான். குழந்தைகள் இன்னும் தூக்கத்தில் இருந்தன. ஒருவழியாக பள்ளி செல்லும் மூன்று குழந்தைகளையும் எழுப்பி த்யார் செய்து அனுப்பிவிட்டு, திண்ணையில் வந்து உட்க்கார்ந்தாள் ராணி.

எதிர் வீட்டுப் பேச்சியும், பக்கத்து வீட்டு காந்திமதியும் சொல்லிவைத்தாற்போல வந்து எதிர் திண்ணையில் அமர்ந்தார்கள். நேற்று மாலையில் நடந்த கூத்தெல்லாம் ஓரளவுக்கு தெரியும் அவர்களுக்கு. அதனால் ஆறுதலாகப் பேச ஆரம்பித்தார்கள். “கவ்லப்படாதீங்க ராணிக்கா. அவிய கொண்ந்தான் தெரியுமில்ல” என்று முத்லில் ஆரம்பித்த்து காந்திமதி. பேச்சி சொன்னாள், “இந்தக் ஆச்சி கிழவிதானே சின்னக்குட்டிய இடுப்புல வச்சிக்கிட்டு நாள் முழுக்க கொஞ்சிக்கிட்டு இருந்தா?. அப்ப கழட்டி ராணிகிட்ட குடுத்து கொண்டுபோய் பொட்டியில் வையின்னு சொல்ல வேண்டியது தானே?. ராணியக்காவ குத்தம் சொன்னா எப்புடி? அவ பாவம் கோயிலுக்கும் அடுக்களைக்குமா கெடந்தா. அதுமட்டுமில்லாம, கெழவி போட்ட சங்கிலிய கழட்டி இவ பொட்டியில வச்சிட்டான்னு வையி. அதுக்கு ஒரு சண்டை வளத்த்ருக்க மாட்டாளா அந்த. ஆச்சி?” ராணிக்கு கண்ணீர் வழிந்த்து. “அதெல்லாம் போவுட்டும் வுடு காந்தி. பத்து வருசமா நானும் பாத்துக்கிட்டுதானே இருக்கேன். அண்ணாச்சி கை நீட்டி அடிச்சிருப்பாரா அக்காவ. இந்த ஆச்சி பண்ணுன அக்குறும்பு சொல்ல ஏலாது..” என்று தொடர்ந்தாள் பேச்சி. அவர்களது பேச்சுகள் உண்மையான அக்கறையுடன் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக இருந்த்து மூன்று பெண்களும் பேசிக்கொண்டேயிருந்தார்கள். மணி பதினொன்று இருக்கும்.

அப்பொழுது அங்கே வந்தான் பக்கத்து தெரு கிருஷ்னன். ‘கிருஷ்னன் ஒரு இறிசு. அதாவது, அரவாணி. இந்த கிராமத்தில் எல்லோருக்கும் எடுபிடி வேலை செய்து இவன் பிழைப்பு நடக்கிறது. கிருஷ்ன்னுக்கு ஆண்கள் எல்லோரும் ‘அண்ணாசிகள்’ பெண்கள் எல்லோரும் ‘அக்காக்கள்’. ஆனால் இவனது உடன் பிறந்த ‘அக்கா’ ஒருத்தி இருக்கிறாள். பெயர் சோமு என்கிற சோமசுந்தரி வீட்டிலேயே இட்டிலிக்கடை நட்த்துகிறாள். .

திண்ணையில் இருக்கும் பெண்களைப் பார்த்த்தும், “யக்கா, நேத்து கோயில்ல ஒரு பவுனு சங்கிலி கெடந்துச்சாம். எங்க சோமுக்கா எடுத்து வச்சிருக்கு. யாராவது தேடி வந்தா சொல்லுங்க்க்கா..” என்றப்டி நடக்கத் துவங்கினான் அவன்.

பேச்சிதான் ஒரே குதியாக திண்ணையிலிருந்து குதித்து, “நில்லு கிருஷ்ணா. இங்கே வ்ந்துட்டு போ” என்று அவனைக் கையைப் பிடித்து இழுத்து வந்து, ராணியின் குழந்தை சங்கிலியைத் தொலைத்த கதையைச் சொல்லி, “எங்க கூட வா கிருஷ்ணா ஒங்க அக்கா வீட்டுக்குப் போகலாம்” என்று தங்கள் வீடுகளைப் பூட்டிக்கொண்டு குழந்தைகள் சகிதமாக மூவரும் புறப்பட்டனர்.

கிருஷ்ணன் சோமக்கா வீடு வந்ததும், “வாங்கக்கா. வாங்க உள்ளே” என்று அழைத்தவாரு அந்த குடிசை வீட்டினுள் சென்றவன், போனவன் திரும்ப வந்து “அக்கா குளிச்சிக்கிட்டு இருக்கா. நீங்க இரிங்க்கா” என்று ஒரு பாயை எடுத்து விரித்தான். ராணியும் ம்ற்ற இருவரும் வீட்டினுள் சென்று பாயில் அமர்ந்த்னர். ஒரு பத்து நிமிடம் கழிந்த்தும் உள்ளேயிருந்து அக்கா வந்தாள். ராணி கனவில் கண்ட் அதே உருவம்; அதே பச்சை நிறப்புடவை. அதே புன்சிரிப்புடன் வந்து “இதுதானா பாருங்க” என்று தன் கையை விரித்துக் காட்டினாள் அந்தப் பெண்.


அங்கே சின்னக்குட்டி தொலைத்த அதே டாலர் சங்கிலி மின்னியது

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சென்னையின் இருளை வென்ற மின்சுடர்: 1930-களின் தடைகளைத் தகர்த்த முதல் பெண் பொறியாளரின் கதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தலைமுறை கடந்த தேவ கானம்: அழியா வரம் பெற்ற டி.எம்.எஸ் காவியப் பாடல்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பேனா பிடிக்கத் தெரியாத தலைமுறை! - உங்கள் குழந்தை படிக்கிறது , ஆனால் எழுதத் தெரியுமா?

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நாலு பேருக்கு நன்றி! - அனுபவப் பகிர்வு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

தேனீக்களின் தோழி... கிராமத்து பெண்களின் வழிகாட்டி! இயற்கையோடு இணைந்த ஒரு பயணம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

அயோத்திதாசர் - ஆதித் தமிழரின் சாதியற்ற தேசக் கனவு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க