செய்திகள் :

ஜாமீன் கிடைக்க ஐகோர்ட் நீதிபதிக்கு பில்லிசூனியம்; சுடுகாட்டில் நீதிபதி படத்திற்கு பூஜை; 4 பேர் கைது

post image

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் பில்லிசூனியத்திற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எதாவது காரியம் நடக்க வேண்டும் என்றால் அல்லது தனக்கு வேண்டப்படாத நபருக்கு பில்லிசூனியம் வைக்கப்பது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சத்தீஷ்கர் மாநிலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பில்லி சூனியம் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஷ்கர் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டத்தின் சிபாட் அருகில் உள்ள தியோரி கிராமத்தில், நான்கு நபர்கள் நள்ளிரவு அங்குள்ள சுடுகாட்டில் அமானுஷ்ய சடங்குகளைச் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதிக்கு பில்லிசூனியம்

அவர்கள் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படத்தை வைத்து பில்லி சூனியம் செய்ய முயன்றனர். நள்ளிரவு நேரத்தில் சுடுகாட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் நடமாடுவதைப் பார்த்த கிராமவாசிகள், அந்த இடத்தைச் சுற்றி வளைத்து, அந்தக் கும்பலைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.

அங்கு இருந்தவர்களில் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் பிடிபட்டார். அந்த நபரின் பெயர் ரிஷிகேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபரை பொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

சுடுகாட்டில் நள்ளிரவு பூஜை

போலீஸார் சுடுகாட்டை ஆய்வு செய்தபோது, தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹாவின் புகைப்படம் மற்றும் இரண்டு பேரின் புகைப்படங்களைச் சுற்றி பூஜைப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.

மீன்கள், எலுமிச்சை, வெர்மிலியன், தேங்காய் மற்றும் தாந்த்ரீக சடங்குகளுடன் தொடர்புடைய பல்வேறு மர்ம பொருட்களும் இருந்தது. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஜாமீன் கிடைக்க பூஜை

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் படத்திற்கு அருகில் பலியிடுவதற்கான பொருட்களும் இருந்தது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிலுவையில் உள்ள ஒருவர் தனக்கு ஜாமீன் கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்தப் பில்லி சூனியத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரித்தபோது தனக்கு சமூக ஊடக தளங்கள் மூலம் சாமியார் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது என்று தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள உறவினருக்குச் சாதகமான ஜாமீன் உத்தரவைப் பெறுவதற்கு பூஜை செய்ய சாமியாரை அனுகியதாகவும் அவர் தெரிவித்தார்.

பரமக்குடி: சவடு மண் வியாபாரியிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம்; வருவாய் கோட்டாட்சியர் சிக்கியது எப்படி?

பரமக்குடி அருகே உள்ள செல்லூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் பரமக்குடி பகுதியில் சவடு மண் விற்பனை செய்து வருகிறார். இதற்கான அனுமதியினை மாதம் தோறும் பரமக்குடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியரிடம் பெற வேண்டு... மேலும் பார்க்க

கடந்தமுறை உங்களிடம் ரூ.50 லட்சம் திருடினோம், மீண்டும் வருவோம்: வழக்கறிஞரிடம் ரூ.3.15 கோடி கொள்ளை

ஹரியானா மாநிலம் குருஷேத்ராவை சேர்ந்தவர் பல்வந்த் சிங் வாலியா. மூத்த வழக்கறிஞரான பல்வந்த் சிங் இரவு 9 மணிக்கு தனது நாயை நடைபயிற்சிக்கு வெளியில் அழைத்து சென்றார். வீட்டில் அவரது மனைவி மட்டும் இருந்தார்.... மேலும் பார்க்க

கொலை செய்வதை வீடியோ எடுத்த இளைஞர்கள்; ரத்தம் வடிந்த கத்தியை வாயில் வைத்து செல்ஃபி - கோவை அதிர்ச்சி!

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சி... மேலும் பார்க்க

தூத்துக்குடி டு இலங்கை; கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள், புறாக்கள் பறிமுதல்!

தூத்துக்குடி கடற்கரைப் பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலைகள், சங்குகள், மஞ்சள், கடல் அட்டைகள், வலி நிவாரணி மாத்திரைகள், போதை மாத்திரைகள், போதையேற்றும் பொடிகள், கஞ்சா ஆகியவை கடத்தப்படுவ... மேலும் பார்க்க

15 வயது சிறுவன்: விளையாடும்போதே சுருண்டு விழுந்து உயிரிழப்பு - அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் தக்ஷிணா கன்னடா மாவட்டம் சுராத்கல் அருகே உள்ள சுரிஞ்சே கிராமத்தைச் சேர்ந்தவர் லிகித் அமீன். 15 வயதான இவர்10-ம் வகுப்பு படித்து வந்தார். புதன்கிழமை (ஆகஸ்ட் 5) தனது நண்பர்களுடன் வாலிபால் ... மேலும் பார்க்க

`நான் உனது பாஸ்' எனக்கூறி பெண் பாலியல் வன்கொடுமை: தெஹல்கா ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டு சிறை

தெஹல்கா பத்திரிகை நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் 2013ம் ஆண்டு அந்த இதழ் ஏற்பாடு செய்திருந்த 'திங்க்ஃபெஸ்ட்' நிகழ்வின்போது, ​​கோவாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் வைத்து, நவம்பர் 7 மற்றும் 8 ஆ... மேலும் பார்க்க