குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' -...
டிகிரி படித்திருக்கிறீர்களா? கிட்டத்தட்ட ரூ.50,000 சம்பளம்; தமிழ்நாட்டில் வங்கி வேலை!
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
என்ன பணி?
வட்டம் சார்ந்த ஆபீசர் (Circle Based Officer)
மொத்த காலிப்பணியிடங்கள்: 2050; தமிழ்நாட்டில் 165.
வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
சம்பளம்: ரூ.48,480
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி.
குறிப்பு: இந்தப் பணிக்குப் படிப்பிற்குப் பிறகு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வணிக வங்கி அல்லது பிராந்திய கிராமப்புற வங்கியில் பணிபுரிந்திருக்க வேண்டும்.
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
ஆன்லைன் தேர்வு, ஸ்கிரீனிங் தேர்வு, நேர்காணல், உள்ளூர் மொழி திறன் தேர்வு.
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?
சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, நாகர்கோயில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
தேர்வு எப்போது நடைபெறும்?
மார்ச், 2026.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 18, 2026
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

















