'சொந்த வீடு வேண்டாம்; வாடகை வீடே போதும்.!' - இன்றைய இளைஞர்கள் இப்படி யோசிக்க என்...
டிடர்ஜென்ட், பாமாயில் மூலம் செயற்கை பால் தயாரிப்பு: மகாராஷ்டிரா முழுவதும் 2.3 கோடி லிட்டர் விநியோகம்
மகாராஷ்டிராவில் பால் கலப்படத்திற்கு எதிராக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிர மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தின் பூம் தாலுகாவில் நடத்திய ரெய்டில் பெரிய அளவில் பால் கலப்படம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட விற்பனைப் பதிவேடுகளை ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பால் கலப்படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 2,30,470 கிலோ தரமற்ற பால் பவுடர் இந்த கலப்படத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. பால் பவுடரை டிடர்ஜென்ட், பாம் ஆயில் மற்றும் யூரியாவுடன் கலந்து, தோராயமாக 23,04,070 லிட்டர் நச்சுத்தன்மை வாய்ந்த செயற்கை பால் தயாரிக்கப்பட்டுள்ளது.
கலப்பட கும்பல் 100 லிட்டர் தூய பாலில் 10 லிட்டர் செயற்கை பாலை கலந்துவிடுவது வழக்கம். பாலின் தரத்தை பராமரிப்பதற்காக 10% கலப்பட விகிதம் வேண்டுமென்றே பராமரிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பொதுமக்கள் பாலை காய்ச்சும் போதோ அல்லது குடிக்கும் போதோ அதன் செயற்கை சுவையோ, ரசாயன வாசனையோ அல்லது கொழுப்பு அடர்த்தியோ அவர்களுக்கு எளிதில் தெரியாமல் இருக்கவும் இந்த விகிதத்தை அவர்கள் கையாண்டுள்ளனர்.
அதிக கொழுப்புள்ள பாலைக் குலுக்கும் போதோ அல்லது ஊற்றும் போதோ இயற்கையாக வரக்கூடிய அடர்த்தியான நுரையை உருவாக்குவதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது
இதன் மூலம் மகாராஷ்டிரா முழுவதும் 2.3 கோடி லிட்டர் கலப்பட பால் விநியோகம் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பால் கலப்படத்தில் ஈடுபட்டது தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் தப்பிவிட்டனர். டிடர்ஜென்ட் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கான பாம் ஆயிலை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் உட்புறப் பகுதியை முற்றிலும் சிதைத்து, இறுதியில் நாள்பட்ட உறுப்பு செயலிழப்புக்கு வழிவகுக்கும். டிடர்ஜென்ட்டின் கடுமையான காரத்தன்மை ரசாயனப் பொட்டல், குடல் புண்கள் மற்றும் செரிமான மண்டலம் மற்றும் குடல் பாதையில் நிரந்தர அரிப்பை ஏற்படுத்திவிடும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.



















