செய்திகள் :

டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

post image

வேலூர் கோட்டை வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை வடக்கு காவல் நிலையப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதில்சுவர் நடைபாதை பகுதியில் `டி.எஸ்.பி சீருடை’யில் பெண் ஒருவர் பிறந்த நாள் கேக்குடன் அமர்ந்திருந்தார். காலில் அவர் ஷூ அணியாமல், செருப்பு போட்டிருந்ததால் ரோந்து போலீஸாருக்கு பெண்ணின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரின் அருகில்சென்ற போலீஸார், `மேடம் நீங்க டி.எஸ்.பி-யா? இந்த மாவட்டத்துல உங்களைப் பார்த்ததே இல்லையே. யார் நீங்க? எந்த ஊர்? இங்கே ஏன் வெயிட் பண்றீங்க?’ என்று கேட்டிருக்கின்றனர். அதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

போலி டி.எஸ்.பி உமா மகேஸ்வரி

அதில், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகேயுள்ள நேமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (33) என்பதும், திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள் எனவும் தெரியவந்தது. 10-ம் வகுப்பு வரை படித்திருக்கும் உமா மகேஸ்வரி, சில மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துவந்திருக்கிறார். அந்த வீட்டில் 22 பவுன் நகை திருட்டு வழக்கில் கைதாகியிருக்கிறார். அதைத் தொடர்ந்து, சென்னை பூக்கடை பகுதியில் உறவினர் ஒருவர் வீட்டிலும் ரூ.15 ஆயிரம் பணம் திருடியதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, சொந்த ஊருக்குத் திரும்பிய உமா மகேஸ்வரிக்கு மேல்அரசம்பட்டு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர் அறிமுகமாகியிருக்கிறார். நேற்று முன்தினம் அவருக்குப் பிறந்த நாள் என்பதால், அவரை `இம்ப்ரஸ்’ செய்வதற்காக டி.எஸ்.பி சீருடை அணிந்து வந்திருக்கிறார். ஆண் நண்பர் வர தாமதமானதால், போலீஸாரிடம் சிக்கிக்கொண்டார். இதையடுத்து, வழக்கு பதிவு செய்த போலீஸார், போலி டி.எஸ்.பி உமா மகேஸ்வரியை கைது செய்திருக்கின்றனர்.

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க

சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம் மற்றும் கருவறை திருக்கதவுகள் ஆகியவற்றில் தங்கம் பதித்ததில் நடந்த மோசடி குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது. ​சபரிமலை கருவறை மற்றும் அதன் இருபுறமும் ... மேலும் பார்க்க

"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள... மேலும் பார்க்க