செய்திகள் :

டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ் `அதிர்ச்சி' பதில்!

post image

டெல்லியில் 'நபர்கள் காணாமல் போகும் வழக்குகள்' தொடர்ந்து அதிகம் பதிவாகி வருகின்றன.

PTI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, 807 பேர் டெல்லியில் காணாமல் போயிருக்கின்றனர்.

டெல்லி போலீஸாரின் தரவுகளின் படி, காணாமல் போனவர்களில்...

> மூன்றில் இரண்டு பேர் பெண்களும், குழந்தைகளும்,

> அதில் 191 பேர் 18 வயதிற்குக் குறைந்தவர்கள், 616 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்,

டெல்லி போலீஸ்
டெல்லி போலீஸ்

> 800 பேரில் 509 பெண்கள் மற்றும் குழந்தைகள், 298 பேர் ஆண்கள்,

> 18 வயதிற்குக் கீழ் காணாமல் போனவர்களில், 169 பேர் டீன்-ஏஜர்கள். 138 பேர் பெண் குழந்தைகள், 31 பேர் ஆண் குழந்தைகள்.

> இதுவரை போலீஸார் 235 பேரைக் கண்டுபிடித்துள்ளனர். 572 பேரின் நிலை தெரியவில்லை.

வெளியாகி உள்ள தரவுகளின் படி,

கடந்த மாதம் 1-ம் தேதியில் இருந்து 15 தேதிக்குள், டெல்லியில் தினமும் சராசரியாக 54 பேர் காணாமல் போயிருக்கின்றனர்.

இதில் ஒரு நாளுக்கு சராசரியாக 13 குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றனர்.

இந்தத் தரவுகள் டெல்லி முழுவதும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

இந்த அதிர்வலைகளுக்கு டெல்லி போலீஸார் வழங்கி உள்ள பதில்...

"டெல்லியில் காணாமல் போகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 1,777 காணாமல் போன வழக்குகள் பதிவாகியுள்ளன.

ஆனால், டெல்லியில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 2,000 காணாமல் போன வழக்குகள் பதிவாகும்.

இந்த எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் இருந்து நிலைத்து வருகிறது.

2016-ம் ஆண்டில் இருந்து ஆண்டுக்கு 23,000 - 24,000 காணாமல் போன வழக்குகள் பதிவாகி வருகின்றன."

பஞ்சாப்: குருத்வாரா அருகில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேராய் சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாடல் டவுனில் இருக்கும் குருத்வாராவிற்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேரா இன்று காலை தனது காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த மர... மேலும் பார்க்க

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து; 18 உடல்கள் மீட்பு; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பங்களில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மற்றும் கருவறை திருநடையில் பூசப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்தும் ஐகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன... மேலும் பார்க்க

கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்துமதிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அசோக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்... மேலும் பார்க்க

Honeymoon murder: மேகாலயா சம்பவ பாணியில் `தேனிலவு அதிர்ச்சி' - கணவனைக் காதலன் மூலம் கொலைசெய்த மனைவி!

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மது போதை’ நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - விலக்கி வைக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுச்சேரி கிராமப்புற மதுக்கடை ஒன்றில் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞரு... மேலும் பார்க்க