செய்திகள் :

டெல்லி: 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து; 9 பேர் பலி; 5 பேரைக் காணவில்லை; ஏ.சி வெடித்ததுதான் காரணமா?

post image

டெல்லியில் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள விவேக் விகார் பகுதியில், இன்று அதிகாலை 4 மணிக்கு நான்கு மாடிகள் கொண்ட குடியிருப்புக் கட்டிடத்தில் திடீரெனத் தீப்பிடித்துக்கொண்டது.

கட்டிடத்தின் 2வது மாடியில் பற்றிய தீ மளமளவென மூன்று மற்றும் நான்காவது மாடிக்கும் பரவியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

தீவிபத்தில் சிக்கிக்கொண்ட 12க்கும் அதிகமானோரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தீவிபத்தில் கட்டிடம் முழுக்க எரிந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தீயணைப்புத் துறை அதிகாரி ராஜேந்திர பிரசாத் இது குறித்து கூறுகையில், ''அதிகாலை 4 மணிக்கு தீவிபத்து குறித்து எங்களுக்கு தகவல் வந்தது. 14 வண்டிகளில் சென்று தீயை இரண்டு மணி நேரத்தில் அணைத்துவிட்டு தேடுதல் பணியில் ஈடுபட்டோம்'' என்று தெரிவித்தார்.

தீ விபத்து நடந்த குடியிருப்பு
தீ விபத்து நடந்த குடியிருப்பு

தீவிபத்தில் இறந்த 9 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இன்னும் 4 முதல் 5 பேரைக் காணவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தீவிபத்துக்கான காரணம் குறித்து தெரியவில்லை என்றாலும் ஏ.சி வெடித்து இத்தீவிபத்து நடந்திருக்கவேண்டும் என்று அக்கட்டிடத்தில் வசித்த ஒருவர் குறிப்பிட்டார்.

அதே கட்டிடத்தில் வசித்த மற்றொருவர் இது குறித்து கூறுகையில், ''எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேரைக் காணவில்லை. தீயணைப்புத் துறையினர் பால்கனி வழியாக 20 பேரை மீட்டனர்'' என்றனர். தீயணைப்புத் துறையினர் காணாமல் போனவர்களைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

ஆரஞ்சு அலர்ட் மீறல்; 'நோ' ஜாக்கெட் - மத்திய பிரதேச க்ரூஸ் விபத்து காரணங்கள்; 5 தமிழர்கள் உயிரிழப்பு

நேற்று முன்தினம் (ஏப்ரல் 30), மத்திய பிரதேசம் பர்கி அணையில் க்ரூஸ் விபத்து ஒன்று நடந்தது. அது இரவு 6 - 6.30 மணியளவில் நடந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணம் என்ன? க்ரூஸ் விபத்து கமாரியா தீவிற்கு அருகே ந... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேச படகு விபத்து: தாய்-மகன் ஒரே Life Jacket அணிந்து தப்பிக்க முயன்று உயிரிழந்த பரிதாபம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகில் நர்மதா ஆற்றில் சொகுசு படகில் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப்பார்க்கச் சென்றனர். படகு ஆற்றின் நடுவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பலத்த புயல் காற்று வீசியது. இதன... மேலும் பார்க்க

டெல்லியிலிருந்து கிளம்பிய ஸ்விட்சர்லாந்து விமானம்; இன்ஜினில் தீ பிடித்து விபத்து: 6 பயணிகள் காயம்!

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூரிச் நகருக்கு Flight No. LX147 என்ற விமானம் புறப்படத்தயாராக இருந்தது. விமானத்தில் 223 பயணிகள் இருந்தனர். இன்று அதிகாலை விமானம் புறப்பட்டபோது அதன் ஒரு ... மேலும் பார்க்க

கேரளம்: திருச்சூர் பூரத்துக்கு தயாரித்த பட்டாசு வெடித்து விபத்து; 13 பேர் பலி, 5 பேர் கவலைக்கிடம்!

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் திருச்சூர் பூரம் எனப்படும் விழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். திருச்சூர் பூரத்தின்போது பட்டாசுகள் போட்டிப்போட்டுக்கொண்டு வெடிக்கப்படுவது மிகவும் பிரமாண்டமான நிகழ்வா... மேலும் பார்க்க

திறப்பு விழா நேரத்தில் விபரீதம்: ராஜஸ்தான் பெட்ரோகெமிக்கல் வளாகத்தில் தீ - பிரதமர் மோடி வருகை ரத்து!

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ராவில் உள்ள பச் பத்ரா (Pachpadra) சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கவிருந்த நிலையில், இன்று அங்கு ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாகத் திற... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீரில் கோர விபத்து: மலைப்பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 15-க்கும் மேற்பட்டோர் பலி!

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று ஒரு பயணிகள் பேருந்து மலையிலிருந்து உருண்டு விழுந்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்... மேலும் பார்க்க