செய்திகள் :

தமிழக அரசின் உத்தரவை மீறி கர்நாடகாவுக்கு கனிமங்கள் கடத்தல்; வாகனங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்!

post image

அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது கேரளா, கர்நாடக அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனிமம் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

மாநில எல்லையில் அமைந்துள்ள, கனிம வளம் அதிகம் வெட்டியெடுக்கப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், அண்டை மாநிலங்களுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவல்துறை, வருவாய்த் துறை, கனிமவளத் துறை போக்குவரத்துத் துறையை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அனைத்து எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகனச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களில் அரசு அனுமதி பெற்று நூற்றுக்கணக்கான வாகனங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகாவுக்கு கனிமங்கள் கொண்டு செக்லப்பட்டு வந்தது இயல்பாக நடந்து வந்த நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு கனிமம் கொண்டு செல்வோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆய்வு செய்த கிருஷ்ணகிரி கலெக்டர்

இந்த நிலையில் கிருஷ்ணகிரி–ஓசூர் எல்லையில் அமைந்துள்ள ஜூஜுவாடி சோதனைச் சாவடியில் கனிமங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு வாகனங்கள், பாகலூர் அருகே கிருஷ்ணகிரி–கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சம்பங்கிரி எல்லைச் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனங்கள், தளி அருகே உள்ள கும்மலாபுரம் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனங்கள் என மொத்தம் ஆறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

'திமுக கூட்டத்தில் பங்கேற்ற ஷாநவாஸ் விசிக மாநாட்டை புறக்கணித்தது ஏன்?' - குமுறும் விசிக தொண்டர்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் தமிழ்தேசிய எழுச்சி மாநாட்டில் பங்கேற்காதது கட்சிக்குள் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 'ஷாநவாஸிடம் கட்சித் தலைவர் திருமா விளக்கம் கேட்க... மேலும் பார்க்க

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுக (EXIM) வர்த்தகம் - பிரத்யேக புகைப்படங்கள்!

கேரள முதல்வர் தொடங்கி வைத்த விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் (EXIM) வர்த்தகம்.! பிரத்யேக புகைப்படங்கள்.! மேலும் பார்க்க

கர்நாடக வனத்துறை தூப்பாக்கிச் சூடு: "காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!" - மு.க. ஸ்டாலின்

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில், காவிரி வனவிலங்கு சரணாலயத்திற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியளவில் தோமையார்பாளையத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கர்ந... மேலும் பார்க்க

ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் உண்மைத் தன்மை அறிதல்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு!

அரசு தொடக்க, நடுநிலை, அரசு நகராட்சி மற்றும் மாநகராட்சி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகளின் உண்மைத் தன்மையை அறிய பள்ளிக் கல்வித்துறையிலிருந்து உத்தரவிடப்பட்ட... மேலும் பார்க்க

`அதுக்கு எந்த ரியாக்ஷனும் கொடுக்காம... இதுக்கு கைது பண்ணிட்டாங்க!' - உதயநிதி ஸ்டாலின்

அண்ணா அறிவாலயத்தில் வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் கைது செய்யப்பட்டபோது நடந்தது குறித்தும், தவெக அரசை விம... மேலும் பார்க்க

சேலம்: 80 வது சுதந்திர தின விழாவின் கோலாகலமான கொண்டாட்டம்! | Photo Album

சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்சேலம் சுதந்திர தினவிழா கொண்டாட... மேலும் பார்க்க