செய்திகள் :

`தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் ஒழிக ஒழிக எனச் சொன்னேன்”- தி.மு.க எம்.எல்.ஏ., மகன் அக்ஷய்

post image

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்த போது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகனும்,  டெல்லியில் சட்டக் கல்லூரியில்  4-ம் ஆண்டு படித்து வரும் அக்‌ஷய்,  திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ”ஒழிக..ஒழிக..” என்று குரல் எழுப்பினார். அவரை போலீஸார் அங்கிருந்து  அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அழைத்துச் சென்ற போலீஸார்

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்க்ஷய், ”தமிழக முதல்வர்  இந்த தமிழ்நாட்டிற்கு குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார்.  அவருடைய குரல்தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது.  

பாசிச மற்றும் தனது சொந்த கருத்துக்களை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம்  ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது.  மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதையொட்டி பேசியிருந்தார்.

அந்த தீர்ப்பின் மூலம் என்னால் தீபத்தை ஏற்ற முடியவில்லை . நான் வந்துள்ள இந்த மன்றத்தில் தீபத்தை ஏற்றி விடுவேன் என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார். அதைக் கண்டு நான் மிகவும் கவலை அடைந்தேன். இதையொட்டி தமிழக முதல்வர் அவர்கள் ஒரு புரட்சிகரமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். நாம் இதை செய்வோம். அதனால் வரக்கூடிய பின் விளைவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார் இந்த தைரியத்தில்தான் நான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அந்த கோஷத்தை எழுப்பினேன்.  ஒழிக ஒழிக  நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன். ”Corruption” என்பது பணத்தால் மட்டும் கிடையாது .

அழைத்துச் சென்ற போலீஸார்

கருத்துக்களாலும் ஆகக் கூடியது. அதேபோன்று ”corrupted” கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் இன்று இருக்கின்றனர்.  விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மீது நாடாளுமன்றம் மூலமாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி  எம்.பியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். அந்த நீதிபதிக்கு தகுந்த நீதியை பெற்று தருவார் என்று நம்புகிறேன்” என்றார்.

ரூ.10200000000 `ஓராண்டு பட்ஜெட்டே போடலாம்; திமுக ஊழல் கறைவேட்டிகள் கம்பி எண்ணுவது உறுதி" - எடப்பாடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையைக் கவனித்து வரும் திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு, தனது துறையில் ரூ. 1,020 கோடி வரையில் ஊழல் செய்திருப்பதாகவும், வழக்குப் பதிவு செய்யவும் தமிழக தலைம... மேலும் பார்க்க

"அன்புமணிக்கும், பாமக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என உறுதியாகிவிட்டது" - எம்.எல்.ஏ அருள்

சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாமக சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, "ஒரு சில பொறுப்பாளர்கள் கட்சியை திருட பொய... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் வரவிருக்கும் 'டொனால்ட் ட்ரம்ப் சாலை' - ரேவந்த் ரெட்டி முடிவுக்கு பாஜக எதிர்ப்பு!

'தெலங்கானா ரைசிங் குளோபல் உச்சி மாநாட்டிற்கு' (Telangana Rising Global Summit) முன்னதாக, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நோக்கில், அந்த மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹைதராபாத்தில் உள்ள ஒரு முக்கியச் சாலைக... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை உடைக்க சதி - கொந்தளிக்கும் கு.பாரதி

அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மைப் பணியாளர்களின் சம்பள விவகாரத்தில் ஊழல் நடப்பதாக பாஜகவின் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனிடம் புகார் கொடுத்திருந்தார்.கராத்தே திய... மேலும் பார்க்க

TVK : கட்டையை போட்ட ரங்கசாமி; சங்கடத்தில் விஜய்! - புதுச்சேரி விசிட் பின்னணி என்ன?

தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் பொதுக்கூட்டத்தை நடத்தவிருக்கிறார். கட்சி ஆரம்பித்த பிறகு விஜய் முதல் முறையாக புதுச்சேரிக்கு செல்கிறார். ஏற்கனவே டிசம்பர் 5 ஆம் தேதி அங்கே கூட்டம் நடத்துவதாக இருந்... மேலும் பார்க்க

US: ``உங்கள் மனைவி உஷாவை இந்தியாவுக்கு அனுப்புங்கள்'' - ஜேடி வான்ஸ் மீது கடும் விமர்சனம் ஏன்?

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் (JD Vance) “அதிகப்படியான குடியேற்றம் (Mass Migration) என்பது அமெரிக்கக் கனவைத் திருடுவது” என்று தெரிவித்த கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.`இந்தக் கருத்து முரண... மேலும் பார்க்க