செய்திகள் :

தமிழ்நாட்டில் 52 கோயில்களுக்கு செல்போன் எடுத்துச் செல்லத் தடை; எந்தெந்தக் கோயில்கள்?|முழுப் பட்டியல்

post image

தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை திருக்கோயில்களுக்குள் பக்தர்கள், பொதுமக்கள் புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கும் வசதி கொண்ட கைப்பேசியை எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு நேற்று முதல் (செப்.1) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், ``ஏற்கெனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனைத் தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் ரமேஷ்
அமைச்சர் ரமேஷ்

ஏற்கெனவே பழனி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்குத் தடை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கியத் திருக்கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், வீடியோ/ரீல்ஸ் எடுப்பதைத் தடுக்கவும் இக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் 52 முதுநிலைத் திருக்கோயில்கள் மாவட்டவாரியாகப் பிரிக்கப்பட்டு கீழே வழங்கப்பட்டுள்ளன:
சென்னை

  • மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

  • சென்னை வடபழனி ஆண்டவர் கோயில்

  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயில்

திருவள்ளூர்

  • திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்

  • திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி / வடிவுடையம்மன் கோயில்

  • பெரியபாளையம் பவானி அம்மன் கோயில்

  • திருவள்ளூர் வீரராகவர் கோயில்

திருவேற்காடு
திருவேற்காடு

காஞ்சிபுரம்

  • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் (தேவராஜ சுவாமி) கோயில்

  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் / ஏகாம்பரநாதர் கோயில்

செங்கல்பட்டு

  • திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில்

  • மாங்காடு காமாட்சி அம்மன் கோயில்

  • குன்றத்தூர் முருகன் கோயில்

இராணிப்பேட்டை

  • சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

திருவண்ணாமலை

  • திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்

விழுப்புரம்

  • மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்

திருச்சி

  • திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்

  • ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்

  • திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில்

  • திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில்

  • உறையூர் வெக்காளியம்மன் கோயில்

தஞ்சாவூர்

  • திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில்

  • தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் (பெரிய கோயில்) & தேவஸ்தான கோயில்கள்

  • ஒப்பிலியப்பன் கோயில் (வேங்கடாசலபதி திருக்கோயில்)

திருவாரூர்

  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

கரூர்

  • தான்தோன்றிமலை கல்யாண வேங்கட்ரமண சுவாமி கோயில்

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் (பெரிய கோயில்)
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் (பெரிய கோயில்)

திண்டுக்கல்

  • பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

  • அய்யம்பாளையம் வாழைத்தோட்டத்து அய்யன் கோயில்

மதுரை

  • மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்

  • மதுரை கள்ளழகர் கோயில்

  • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்

  • மதுரை சோலைமலை முருகன் கோயில் (பழமுதிர்சோலை)

  • மதுரை கூடலழகர் கோயில்

சிவகங்கை

  • மடப்புறம் அடைக்கலம் காத்த அய்யனார் கோயில்

விருதுநகர்

  • இருக்கன்குடி மாரியம்மன் கோயில்

இராமநாதபுரம்

  • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில்

தென்காசி

  • தென்காசி திருக்குற்றாலநாத சுவாமி கோயில்

  • சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில்

  • தென்காசி திருமலை குமாரசாமி கோயில் (பண்பொழி)

தூத்துக்குடி

  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

கன்னியாகுமரி

  • சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

கோயம்புத்தூர்

  • கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

  • ஆனைமலை மாசாணியம்மன் கோயில்

  • தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோயில்

  • பேரூர் பட்டீஸ்வர சுவாமி கோயில்

  • ஈச்சனாரி விநாயகர் கோயில்

ஈரோடு

  • சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில்

  • பவானி சங்கமேஸ்வரர் கோயில்

திருப்பூர்

  • சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில்

நாமக்கல்

  • நாமக்கல் நரசிம்மசுவாமி கோயில்

  • திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில்

சேலம்

  • சேலம் சுகவனேஸ்வரர் கோயில் / கோட்டை மாரியம்மன் கோயில்

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க