செய்திகள் :

தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற சிறுமி; சிகிச்சையின்போது பிரசவம்; போக்சோ வழக்கில் இளைஞர் கைது

post image

பாட்டி, தாய், சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சையின்போது 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்திய நிலையில் இதற்கு காரணமான வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

போக்சோ வழக்கு
போக்சோ வழக்கு

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 51 வயது பெண், இவரது 35 வயது மகள், 16 வயது பேத்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தருமபுரி ரயில் நிலையம் முன்புள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிகிச்சையின்போது கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொந்த ஊரில் அந்தச் சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்ததும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 30 வயதான அருண்குமார் என்பவருடன் ஏற்பட்ட நட்பில் சிறுமி கர்ப்பமடைடைந்ததும் தெரிய வந்தது.

தருமபுரி
தருமபுரி

மேலும், சிறுமி கர்ப்பமான விஷயத்தைத் தெரிந்துகொண்ட தாயும், பாட்டியும் மன விரக்தி அடைந்து தருமபுரிக்கு வந்தவர்கள், ரயில் நிலையம் அருகே எலி பேஸ்ட்டை உண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணமான அருண்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது பிறந்த குழந்தை உள்ளிட்ட 4 பேரும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தருமபுரி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க