BB Tamil 9 Day 51: டிரையாங்கிள் லவ் ஸ்டோரி; ‘என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாத’ - பாரு...
தலைமைச் செயலகத்தில் செங்கோட்டையன் - எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்!
அதிமுகவில் இருந்து எடப்பாடியால நீக்கப்பட்ட செங்கோட்டையன் தவெகவில் இணைய இருக்கிறார் என்று தகவல் வெளியான நிலையில் செங்கோட்டையன் தலைமை செயலகம் சென்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுவிடம் தந்திருக்கிறார்.


முன்னதாக துக்ளக் ரமேஷ் செங்கோட்டையனை சந்தித்து பேசினார். பின்னர் துக்ளக் ரமேஷ், ``செங்கோட்டையன் தவெக வில் இணைந்த பிறந்த அவருக்கு அளிக்கும் பொறுப்பை பார்த்து... அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் சிலர் செங்கோட்டையனின் வழியை பின் தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது” என்றிருக்கிறார்.


















