செய்திகள் :

தவெக தேனீர் விருந்தைப் புறக்கணிக்க காரணம் என்ன? - சிபிஐ வீரபாண்டியன் விளக்கம்

post image

தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை. 1) முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகளான சிபிஐ, சிபிஎம் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில், இன்று காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ மாநிலப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது, ``நேற்றைய தினம் நடைபெற்றது அரசியல் ரீதியாக அங்கம் வகிக்கும் தோழமை கட்சிகளுக்கான ஒரு தேநீர் விருந்து மட்டுமே. அந்த விருந்தில் நாங்கள் கலந்துகொண்டு ஏதேனும் விவாதங்களோ அல்லது கேள்விகளோ எழுப்பினால், அது தேநீர் விருந்தின் நல்ல சூழலலாக இருக்காது என்பதால் நாகரிகம் கருதிப் புறக்கணித்தோம்.

தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்
தவெக தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

தேநீர் விருந்தில் கலந்துகொண்ட ஜனநாயகச் சக்திகளுக்கு எங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அங்கு பங்கேற்ற எந்தவொரு கட்சி மீதும் எங்களுக்கு அரசியல் பகையோ அல்லது முரண்பாடோ கிடையாது. கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மைப் பகை என்பது ஆர்எஸ்எஸ்-இன் சித்தாந்தமும், பாஜக-வின் அரசியலும்தான்.

தமிழ்நாட்டில் ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே எங்களது ஆதரவை வழங்கினோம். மக்களின் விருப்பப்படி இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் முழுமையாக நீடிக்க வேண்டும் என்பதில் தங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதே நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை தவெக அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

திமுகவினர் தங்களுக்குள்ள உரிமையின்படி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார்கள்; யார் வேண்டுமானாலும் யாரையும் சந்திக்கலாம் என்பதால், அந்த விவரங்கள் முழுமையாக வெளிவந்த பிறகு அதைப் பற்றிப் பேசலாம். இதில் விவாதிக்க எதுவும் இல்லை" என்றார்.

ஆட்சி அதிகாரம் மற்றும் குதிரைப் பேரக் குற்றச்சாட்டுகள் குறித்து எழுந்த பல்வேறு வாதங்களுக்கு ஒரே வரியில் முற்றுப்புள்ளி வைத்த அவர், ''சட்டத்திற்குப் புறம்பான எந்தவொரு செயலையும் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டார்கள்'' என்று எச்சரித்தார்.

''தமிழ்நாட்டு மக்கள் நீண்ட நெடுங்காலமாகப் பின்பற்றி வருகின்ற உன்னதமான அரசியல் மரபுகளுக்கும், அறநெறிகளுக்கும் புறம்பான எந்தவொரு காரியத்தையும் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது என்று அவர் மிக உறுதியாகத் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

'தவெக MLA-க்களுடன் பிரண்ட்ஷிப்; அமைச்சர்களுடன் விருந்து!' - விஜயபாஸ்கர்களின் இணைப்பு விழா ஹைலைட்ஸ்!

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கரும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் தவெகவில் இணைந்திருக்கின்றனர். 10,000 பேருடன் பிரமாண்டமாக விழாவை நடத்தி முடித்திருக்கின்றனர். இந்த விழாவின் ஹைலைட்ஸ் என்னெ... மேலும் பார்க்க

"ஸ்டாலினைப் பார்த்து அரசியலுக்கு வந்து சில மாதங்களேயானவர்கள் விமர்சிப்பது அற்பமானது"- டிடிவி தினகரன்

இன்று அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இணைந்து கொண்டனர். இந்த நிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் சென்னை... மேலும் பார்க்க

"தவெக செய்வது Horse Trading அல்ல, Horse Racing" - பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம்

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போதுபேசிய அவர், “அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்து... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: 'நேருவின் உறவினர் டெண்டரை நடத்த விடாமல் தடுக்கிறாரா?' - பேருந்து நிலைய கழிப்பறை சர்ச்சை

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் மூலம் வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய இடமாக பேருந்து நிலையம் உள்... மேலும் பார்க்க

"ஸ்டாலின் பேச்சின் பின்னணி என்னவென்று இப்போதுதான் தெரிகிறது" - திமுகவை விமர்சித்த பெ.சண்முகம்

தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் பேரம் பேசியதாக ஐபிடிஎஸ் கருத்து கணிப்பு அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்குப் பின்னணியில் செயல்பட்ட நரேஷ், தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இதில் திம... மேலும் பார்க்க

'கரூரில எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு இருக்கு, அதை முடிக்காம விட மாட்டோம்'- ஆதவ் அர்ஜுனா காட்டம்

தவெக இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "தமிழக அரசியல் 2026-க்கு முன்பு, 2026-க்கு பின்பு என்று மாறிவிட்டது. விஜய் என்ற முழக்கம் தமிழ்நாட்டில் மட்டும... மேலும் பார்க்க