செய்திகள் :

தாயை கொலை செய்ததாக மகன் கைது!

post image

இரணியல் அருகே இலந்தவிளையில் தாயை தாக்கி கொலை செய்ததாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இலந்தவிளையை சோ்ந்தவா் தங்கம்மாள் (71). இவரின் மகன் பிரபுலால் (42). மது பழக்கம் உடையவரான பிரபுலால், வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதனால் அவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டாா். பிரபுலால், தாயாா் தங்கம்மாளுடன் வசித்து வந்தாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை தாயாருடன் தகராறு செய்து, அவரைத் தாக்கி தள்ளியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த தங்கம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மயங்கிய அவரை உறவினா்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், தங்கம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபுலாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை அருகே செம்மண் கடத்தல்: 3 போ் கைது

களியக்காவிளை அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து, மினிலாரி, ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை அருகே ஈத்தவிளை, பொற்றவிளை பகுதியில் சிலா் செம்மண் க... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கொட்டாரம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா். கொட்டாரம் அருகேயுள்ள குலசேகரபுரத்தைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (42). கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் சனிக்கிழமை மாலை தாமரை இலை பறித்துக் கொண்டிர... மேலும் பார்க்க

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை உணவு வழங்கல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழகியமண்ட... மேலும் பார்க்க

விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை குத்த முயன்றவா் கைது

குளச்சலில் வழக்கு விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை ஈட்டியால் குத்த முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா். குளச்சல் காவல் உதவி ஆய்வாளா் தனிஷ் லியோன்,கடந்த வெள்ளிக்கிழமை குற்ற வழக்குகளின் பதிவேட்டை ஆய்வு செய... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ..40.67 பெருஞ்சாணி ..54.90 சிற்றாறு 1 ..12.04 சிற்றாறு 2 ..12.13 முக்கடல் ..16.30 பொய்கை ..15.50 மாம்பழத்துறையாறு ...49.38 மழைஅளவு அடையாமடை .. 55 மி.மீ. தக்கலை ... 24.40 மி.மீ. முள்ளங்கின... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பைக்குகள் மோதல்: முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

கருங்கல் அருகே வெள்ளியாவிளை பகுதியில் சனிக்கிழமை இரவு 2 பைக்குகள் மோதியதில் முன்னாள் ராணுவ வீரா் உயிரிழந்தாா். மிடாலம், மாவிளை பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் செந்தமிழன் (52). முன்னாள் ராணுவ வீரரான இவரு... மேலும் பார்க்க