செய்திகள் :

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!

post image

திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய சார்லஸ் என்பவர் மூலம், சேலத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார். 

அப்போது, சேலம் எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் செலவாகும் என்றும் தங்கராஜ் கூறியுள்ளார்.

இதனை நம்பிய ஷீலா மற்றும் அவரது கணவர், கடந்த 15.03.2023 முதல் 15.07.2023 வரையிலான காலகட்டத்தில் தங்கராஜின் வங்கிக் கணக்குகள் மற்றும் கூகுள் பே , போன் பே  மூலமாக மொத்தம் 29 லட்சத்தை அனுப்பியுள்ளனர். 

​மேலும், தங்களது உறவினர்களான மூவருக்கும் வேலை வாங்கி கொடுக்க சொல்லி, தலா 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 21 லட்சத்தையும் தங்கராஜின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.50 லட்சம் பணம் கைமாறியுள்ளது. 

கைது

​இதனிடையே, கடந்த 10.04.2023 அன்று தங்கராஜை நேரில் சந்தித்தபோது, எடப்பாடி அரசு கலைக் கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன் என்பவரை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார். அதன்படி, அன்பழகனைச் சந்தித்தபோது அவர் ஒரு பணி நியமன ஆணையை காண்பித்து, வேலைக்கான ஆணை மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வரும் என்று நம்பும்படி கூறியுள்ளார். பின்னர் ஜெயப்பிரியா என்பவருக்கு ஓர் அரசு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால், நீண்ட நாள்களாகியும் வேலை கிடைக்காததால், அந்தப் பணி நியமன ஆணை குறித்து விசாரித்தபோது, அது முற்றிலும் போலியானது என்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஷீலா, கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு "மீண்டும் பணம் கேட்டு வந்தால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்"  என தங்கராஜூம் அன்பழகனும் மிரட்டல் விடுத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

இது குறித்து பாதிக்கப்பட்ட ஷீலா திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சேலத்தைச் சேர்ந்த தங்கராஜ், அன்பழகன் மற்றும் மோகனாம்பாள் ஆகிய 3 பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 318(3), 318(4), 335, 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தங்கராஜைக் கைதுசெய்திருக்கின்றனர்.

புதுச்சேரி: 625 வகை போலி மருந்துகள்… நாடு முழுவதும் சப்ளை! - அடுத்தடுத்து சிக்கும் உயரதிகாரிகள் ?

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (Sun Pharmaceutical Industries Limited),தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்ட... மேலும் பார்க்க

தருமபுரி: 3 குழந்தைகளுடன் கிணற்றில் மிதந்த தாயின் சடலம்; சந்தேகம் கிளப்பும் கயிறு - போலீஸ் விசாரணை!

தருமபுரி அருகே 3 குழந்தைகள், தாய் என 4 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.தற்கொலைதருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, தோக்கம்பட்டி கிர... மேலும் பார்க்க

10 வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது; நத்தத்தில் தொடரும் மோசடி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகளில் போலி மருத்துவர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து நத்தம் பகுதியில் திண்டுக்கல் மாவட்ட இணை இயக்குநர் நலப்பணிகள... மேலும் பார்க்க

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை சரவணன் கூலிப்படையை ஏவி மற்றொரு கொலைக்குத் திட்டம்; பின்னணி என்ன?

மாற்றுத்திறனாளி உரிமை செயல்பாட்டாளரும் மாற்றுத்திறனாளி வழக்கறிஞருமான முருகானந்தம் என்பவர் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தேன் மொழி மெட்ரிகுலேஷ... மேலும் பார்க்க

ரூ.15,000-க்கு வங்கிகளின் போலி செயலி விற்பனை - பள்ளி படிப்பை கூட முடிக்காதவர் சிக்கியதெப்படி?

நாடு முழுவதும் இணையதள மோசடிகள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த மோசடியில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இது போன்ற மோசடிகள் அதிக அ... மேலும் பார்க்க

மதுரை: "2 லட்சத்திற்கு மாதம் 20 ஆயிரம் வட்டி" - தற்கொலையில் முடிந்த கந்துவட்டி கொடுமை

மதுரை மாநகர் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ராஜாராம், மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரேமா. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒ... மேலும் பார்க்க