செய்திகள் :

திண்டுக்கல்: குவாரியில் வாலிபரின் சடலம் மீட்பு; உறவினர்கள் போராட்டம் - காரணம் என்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் சங்கரா ப்ளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரி ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டிக்கு சொந்தமானது என்றும், அவரது பினாமி பெயரில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி (25 )  என்ற வாலிபர் கல்குவாரிக்கு அருகே சுற்றித்திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போனாதாக உறவினர்கள் தேடி வந்தனர். குவாரியில் இது குறித்து கேட்ட போது இளைஞர் இங்கே வரவில்லை என சொன்னதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று குவாரியில் எம் சாண்ட்  அள்ளும் பணியில் வடமாநில ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது எம் சாண்ட் கொட்டப்பட்ட  10அடி ஆழத்தில் காணாமல் போன கருப்பசாமி உடல் அழுகிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டது. இந்த தகவல் கிராமமக்களுக்கு தெரிந்ததை அடுத்து உறவினர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சக்கரா ப்ளூ மெட்டல் குவாரியை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குவாரி

சம்பவ இடத்திற்கு வந்த ஊரக காவல் கண்காணிப்பாளர் சங்கர், நத்தம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நத்தம் அருகே குவாரிக்குள் வாலிபர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊராட்சி ஆவணங்கள் திருட்டு; முன்னாள் ஊராட்சி செயலர் மீது வழக்கு! - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சிக்குட்பட்ட வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர், இந்த ஊராட்சியின் வரவு செலவு விவரங்கள், கடந்த 2023 அக்டோ... மேலும் பார்க்க

நீதிபதியின் கையெழுத்துடன் பணி உத்தரவு: கர்நாடகா கோர்ட்டில் வேலை என கூறி ரூ.25 கோடியை ஏமாற்றிய தம்பதி

பெங்களூரை சேர்ந்த சிலர் தங்களிடம் கோர்ட்டில் டி பிரிவில் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாக குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்து இருந்தனர். இது போன்ற புகார்கள் பெங்களுரு முழுவதும் உள... மேலும் பார்க்க

பெண் டாக்டர் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை; மனநோயாளி போன்று நடித்தவர் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை நெடும்பனை பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் குடவட்டூர் பகுதியைச் சேர்ந்த சந்தீப்(44). மதுவுக்கு அடிமையான காரணத்தால் ஆசிரியர் பணியில் இரு... மேலும் பார்க்க

மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு – திருடர்களை வலை வீசி தேடி வரும் போலீஸார்!

பொதுவாக தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டம், இட்டமொழியில் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்ப... மேலும் பார்க்க

பள்ளி மாணவி கொலை வழக்கு: ஒரே ஸ்டைலில் கொலைகள் - குற்றவாளி மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகேயுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி, கடந்த 10-ம் தேதி காட்டுப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக மாலை சுமார் 6 மணியளவில் சென்றவர் நீண... மேலும் பார்க்க

பகலில் 5 ஸ்டார் ஹோட்டல் சமையல்காரர்; இரவில் திருடன் - விரைவில் பணம் ஈட்ட நினைத்த இளைஞர் சிக்கினார்

டெல்லி ஆர்.கே புரம் பகுதியில் வசிக்கும் சென் என்பவர் குடும்பத்தோடு ராஜஸ்தானில் நடந்த ஒரு திருமணத்திற்குச் சென்று இருந்தார். அவர் திருமணம் முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் த... மேலும் பார்க்க