பெரியபாளையம்: இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு; தீவிர சிகிச்சையில் இருவர்!
"திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட..." - பெ. சண்முகம் கருத்து!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வருங்காலத்தில் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஒரே கட்சியாக செயல்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனக் குறிப்பிட்டு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய சமூக வலைதளக் கணக்கில், பத்திரிகையாளர் சித்ரா லக்ஷ்மணன் உடனான நேர்காணலைப் பகிர்ந்து, திமுகவும் அதிமுகவும் இணைந்து செயல்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், "சித்தாந்த ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திமுகவையும் அதிமுகவையும் சமமாகக் கருத முடியாது.
அதே சமயம், திராவிடக் கட்சிகள் தங்களின் பழைய விழுமியங்களையும் கொள்கைகளையும் தற்காலத்தில் முழுமையாகக் கடைப்பிடிப்பதில்லை.
தேர்தல் அரசியலில் ஓட்டு வாங்குவதற்காக அவர்கள் சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஆணவக் கொலைகளுக்கு எதிராகக் களத்தில் நின்று போராடுவதில்லை.
இவ்வாறு தம் கொள்கைகளில் பல சமரசங்களைச் செய்துகொண்டு, தங்களைத் தாழ்த்திக்கொண்டுள்ளனர்.
வருங்காலத்தில், திமுகவும் அதிமுகவும் இணைந்து ஒரே கட்சியாகச் செயல்பட்டால்கூட ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.















